HBD Suresh Raina: கிரிக்கெட் உலகின் சரித்திர நாயகன்., தோனியின் நண்பன்.. சின்ன தல சுரேஷ் ரெய்னாவுக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்.!
டி20 விளையாட்டுகளில் 6000 ரன்கள் கடந்த முதல் இந்திய வீரர், சர்வதேச அளவிலான டி20 போட்டிகளில் நூறு ரன்களைக் கடந்த முதல்வீரர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் சுரேஷ் ரெய்னா.
நவம்பர் 27, புதுடெல்லி (Sports News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முதுநகரில், காஷ்மீரி பண்டித் குடும்பத்தில், நவம்பர் 27, 1986 ஆம் ஆண்டுபிறந்தவர் சுரேஷ்குமார் ரெய்னா (Suresh Raina). கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடிய ரெய்னா, 2018ல் சர்வதேச அளவிலான அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
இடது கை பேட்டிங், வலது கை பவுலிங் என கிரிக்கெட்டில் தல தோனிக்கு அடுத்தபடியாக, அவரின் நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்து வந்தவர். இவர் கடந்த 2010 ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான போட்டியில் டெஸ்ட் தொடரில் களமிறங்கி, 2015ல் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தனது ஓய்வை அறிவித்தார்.
அதேபோல, ஒரு நாள் போட்டிகளில் 2005ல் இலங்கை அணிக்கு எதிராக தனது அதிரடி விளையாட்டை தொடங்கி, 2018ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஓய்வு அறிவித்தார். டி20 போட்டிகளில் 2006ல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக களமிறங்கி, 2018ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய பின் ஓய்வு அறிவித்தார். MSD Autograph Fan Bike: ரசிகரின் இருசக்கர வாகனத்தில் ஆட்டோகிராப் போட்ட தோனி: நொடியில் செய்த நெகிழ்ச்சி செயலால் பாராட்டும் ரசிகர்கள்.!
சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு பின், ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தவர், எதிர்பாராத சில காரணங்களால் அதனை தவிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கு பின் வேறு அணிக்கும் அவர் செல்லவில்லை. தொடர்ந்து சென்னை அணிக்காக தனது ஆதரவை தெரிவித்து வருகிறார்.
தோனியின் நெருங்கிய நண்பர் ஆன ரெய்னா, தனது அதிரடி ஆட்டத்தினால் சின்ன தல என்றும் அன்போடு ரசிகர்களால் அழைக்கப்பட்டார். கடந்த 2011 உலகக்கோப்பை வெற்றி, 2013 சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி ஆட்டங்களில் சுரேஷ் ரெய்னாவும் முக்கிய பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
டி20 விளையாட்டுகளில் 6000 ரன்கள் கடந்த முதல் இந்திய வீரர், சர்வதேச அளவிலான டி20 போட்டிகளில் நூறு ரன்களைக் கடந்த முதல்வீரர், ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த முதல் வீரர், 100 சதங்களை கிரிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக அடித்தவர் என பல பெருமையை கொண்டவர் சுரேஷ் ரெய்னா.
இவரின் பிறந்தநாள் இன்று சிறப்பிக்கப்படுகிறது. அவருக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.