Vinesh Phogat Hospitalised in Paris Olympics 2024: அச்சச்சோ என்னாச்சு?.. திடீர் உடல்நலக்குறைவை சந்தித்த வினேஷ் போகத்; மருத்துவமனையில் அனுமதி.!

இறுதிப்போட்டியில் நுழைந்து தங்கத்தை தனக்காக்க காத்திருந்த வீராங்கனை தகுதிநீக்கம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவலால் இந்தியாவே வருத்தம் அடைந்து ஆதங்கம் கொண்டுள்ளது.

Wrestler Vinesh Phogat (Photo Credit: @IAjitDoval_IND X)

ஆகஸ்ட் 07, பாரிஸ் (Sports News): பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் (Paris Olympcis 2024) போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், இந்தியா 32 பிரிவுகளில் உள்ள விளையாட்டுகளில் விளையாடுகிறது. தற்போது வரை இந்தியா 3 வெண்கல பதக்கத்துடன் இந்தியா 63வது இடத்தில் இருக்கிறது. நேற்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில், பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் இந்தியாவின் வினேஷ் போகத் (Indian wrestler Vinesh Phogat), இறுதிசுற்றுக்கு முன்னேறினார்.

முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை:

இதனால் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியான நிலையில், அவர் ஒரே நாளில் உலகளவில் புகழ்பெற்ற 3 சாம்பியன்களை தோற்கடித்து முன்னேறியதால் தங்கப்பதக்கம் வென்று தாயகம் வருவார் என ஒட்டுமொத்த இந்தியாவும் நம்பிக்கை வைத்து காத்திருந்தது. போட்டியில் மல்யுத்த விதிப்படி, போட்டி நடைபெறும் அன்றும், போட்டிக்கு முந்தைய நாளும் ஒரே அளவிலான எடையை வீரர்கள் கொண்டிருக்க வேண்டும் என கூறப்படுகிறது. Vinesh Phogat Disqualified From Paris Olympics 2024: சுக்குநூறாகிப்போன தங்கப்பதக்க கனவு; ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட்..! இந்தியாவே கலங்கியது..!!

100 கிராம் எடை அதிகரித்ததால் தகுதிநீக்கம்:

ஆனால், இன்று நடைபெற்ற எடை பரிசோதனையில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகரித்து இருந்ததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் அவர் 100 கிராம் எடை அதிகரித்த காரணத்தால் தகுதி நீக்கப்பட்டு இருக்கிறார். இதனால் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டி வரை சென்ற முதல் இந்திய பெண்மணியாக கவனிக்கப்பட்ட வினேஷ், அதே பெயருடன் தாயகம் திரும்புகிறார். முதல் பரிசு அமெரிக்க வீராங்கனைக்கு வழங்கப்படும். வெண்கலப்பதக்கத்திற்கு போட்டி பின்னர் நடைபெறும்.

நீரிழப்பு பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதி:

இந்நிலையில், திடீரென உடலில் நீர் இழப்பு பிரச்சனையை சந்தித்த வினேஷ் போகத், பாரிஸில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்ற களநிலவர செய்திகள் வெளியாகி வருகின்றன. வினேஷ் மனஉறுதியுடன் தாயகம் திரும்ப பிரதமர் மோடி முதல் ஒவ்வொரு இந்தியரும் தங்களின் கருத்துக்களை எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.