Harmanpreeth Kavur: 2 போட்டிகள் விளையாட ஹர்மன்பிரீத்-க்கு தடை?; விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு.. அடுத்தது இதுதான்.!
ICC தரவரிசை பட்டியலில் கிரிக்கெட் வீரர் 24 மாதங்களுக்குள் அடுத்தடுத்து 4 புள்ளிகளை இழந்துவிடும் பட்சத்தில், அவர்கள் எதிர்வரும் 2 போட்டிகளில் விளையாட இயலாத சூழ்நிலை ஏற்படும்.
ஜூலை 25, புதுடெல்லி (Cricket News): கடந்த ஜூலை 22ல் இந்தியா - வங்கதேச பெண்கள் அணிக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிராவில் முடிந்தது. இந்தியா - வங்கதேசம் அணிகள் தலா ஒரு புள்ளிகள் பெற்றன. ஆட்டத்தின்போது 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்து. 226 ரன்கள் எடுக்க வேண்டிய இந்திய அணி, 49.3 ஓவரில் தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து 225 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இறுதி ஆட்டத்தில் வெளிப்படுத்திய சொதப்பல் ஆட்டம் காரணமாக கோப்பை கைநழுவியது. ஆனால், ஆட்டத்தின்போது 34வது ஓவரில் ஹர்மன்பிரீத் பேட்டிங் செய்தபோது, எதிரணியின் பவுலிங்கில் விக்கெட் பறிபோனது. ஆனால், அவர் மேல்முறையீடு செய்தபோது அதனை ஏற்றுக்கொள்ளாத நடுவர் விக்கெட் என கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஹர்மன் ஸ்டம்பை போட்டால் தட்டி விட்டு, அங்கிருந்து நடுவரை கண்டித்தவாறு புறப்பட்டு சென்றார். மேலும், ஆட்டம் முடிந்ததும் இரண்டு அணிகளும் கோப்பையை கையில் வைத்திருப்பதை போல புகைப்படம் எடுக்கப்பட்டது. அதாவது, இரண்டு அணிகளின் கேப்டனும் கோப்பையை கையில் வைத்திருந்தனர். அப்போது குறுக்கிட்ட ஹர்மன், வங்கதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானாவை கண்டிக்கும் வகையில் பேசினார். Krishnagiri College Girl Suicide: சந்தேகத்தால் காதலியை கடிந்த காதலன்; அந்த ஒரு போன்கால்.. மனமுடைந்து கல்லூரி மாணவி விபரீதம்: சிறைப்பறவையாக காதலன்.!
நீ செய்ய வேண்டிய வேலைகளை அம்பயர்கள் செய்கிறார்கள். உனக்காக அம்பயர்கள் குரல் கொடுக்கிறார்கள். அவர்களையும் சேர்த்து வரச்சொல் என்று கூற, அடுத்தடுத்த விவாதங்கள் அனைத்தும் ஹர்மன்பிரீத்-க்கு எதிராக திரும்பியதால், அவரின் செயல்பாடுகள் கண்டனத்தை குவித்து வந்தன. இதனால் அவரின் தரவரிசை புள்ளிபட்டியலில் 4 புள்ளிகள் குறைக்கப்படலாம் என்றும் தெரியவந்தது.
இந்நிலையில், ஹர்மன்பிரீத்-க்கு எதிரங்க நடவடிக்கை எடுத்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஹர்மன்பிரீத் ஆசிய விளையாட்டுகளில் 2 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. சீனாவில் உள்ள Hangzhou நகரில் செப்டம்பர் மாதம் 19 ம் தேதி ஆசிய பெண்கள் விளையாட்டு பிரிவுகளுக்கான போட்டி தொடங்கவுள்ளது.
அங்கு நடைபெறும் டி20 ஆட்டத்தில் அவர் கலந்துகொள்ள இயலாது என தெரியவருகிறது. இதனால் அவர் டி20 போட்டியில் முக்கியமான கால் இறுதி, அரையிறுதி போட்டியில் கலந்துகொள்ள முடியாது. நேரடியாக அவர் 2 போட்டிகள் கழித்து இறுதி போட்டியில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு என்ற நிலை உருவாகும். இவை தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு உறுதியாகும் பட்சத்தில், ஹர்மன்பிரீத் கவுர் நேரடியாக இறுதி போட்டிக்கு விளையாட செல்வார்.