Vinesh Phogat Retirement: "போராட சக்தி இல்லை" - மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு.!

100 கிராம் எடை விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ், இதற்குமேல் போராட சக்தி இல்லை என்பதால் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார்.

Vinesh Phogat Retirement (Photo Credit: @CricCrazyJohns X / @Phogat_Vinesh X)

ஆகஸ்ட் 08, பாரிஸ் (Sports News): பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் (Paris Olympics 2024) போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா தற்போது வரை 10 மீட்டர் அளவிலான ஏர் ரைபிள், 50 மீட்டர் அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் 3 வெண்கல பதக்கங்களை கைப்பற்றி இருக்கிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற 50 கிலோ எடைப்பிரிவினருக்கான மல்யுத்த போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் (Vinesh Phogat) இறுதிப்போட்டி வரை சென்று இருந்தார். PM Modi Tweets for Vinesh Phogat: ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட்.. பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்..!

விதிமுறையை மீற முடியாது:

இதனால் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அவர் 100 கிராம் எடை அதிகம் இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்தியாவின் வெள்ளி அல்லது தங்கப்பதக்க கனவு தவிடுபிடியான நிலையில், இந்திய மல்யுத்த வீரர் சம்மேளனம் ஒலிம்பிக்கில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது. அதேவேளையில், சர்வதேச மல்யுத்த சம்மேளனம் 100 கிராம் எடைதான் என சலுகை வழங்கினால், ஒவ்வொருவருக்கும் சலுகை வேண்டியிருக்கும். விதிமுறைகளை மீற இயலாது என கூறிவிட்டது.

வினேஷ் போகத் ஓய்வு பெறுகிறார்:

இதனிடையே, வினேஷ் போகத் இறுதிப்போட்டி வரை தேர்வாகி வந்துள்ள தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டுமென விளையாட்டுத்துறை நடுவர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார். இன்று இடைக்கால தீர்ப்பை நடுவர் நீதிமன்றமானது வழங்க உள்ளது. இதனிடையே, வினேஷ் போகத் தனக்கு இறுதியாக இருந்த பல நம்பிக்கைகளும் தளர்ந்துவிட்டன. இதனால் நான் போராடும் சக்தியை கொண்டிருக்கவில்லை, என்னுடைய நம்பிக்கைகள் அனைத்தும் தளர்ந்து விட்ட காரணத்தால், மல்யுத்த போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன்" என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பல இந்தியர்களின் மனதை வென்ற வினேஷ் போகத், தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் திடீர் உடல்நலக்குறைவையும் சந்தித்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அவரை பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்பேரில், பிடி உஷா நேரில் சந்தித்தும் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.