India Vs South Africa Masters: இந்தியா மாஸ்டர்ஸ் Vs தென்னாபிரிக்கா மாஸ்டர்ஸ் போட்டி இன்று.. எங்கு நடக்கிறது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
சர்வதேச அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களை மையப்படுத்தி, மீண்டும் அவர்களின் திறமைகளை வெளிக்கொணர, ரசிகர்களுக்காக இன்டெர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் பிரீமியர் லீக் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மார்ச் 01, வதோதரா (Sports News): இன்டெர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் பிரீமியர் லீக் (International Masters Premier League 2025) போட்டிகள் விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமாக 18 ஆட்டங்கள் கொண்ட போட்டியில், 06 ஆட்டங்கள் நிறைவு பெற்றுவிட்டன. இந்தியா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கிய இரண்டு போட்டியிலும் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, தொடரில் 07 வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இன்று இரவு 07:00 மணியளவில், வதோதரா பிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில், இந்தியா மாஸ்டர்ஸ் - தென்னாபிரிக்கா மாஸ்டர்ஸ் கிரிக்கெட் அணி மோதுகிறது. AUS Vs AFG Highlights & Match Abandoned: அடை மழையில் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டாட்ட செய்தி.. 270 ரன்கள் குவித்தும் தகுதியை இழந்த ஆப்கானிஸ்தான்.!
இன்று இந்தியா - தென்னாபிரிக்கா அணிகள் மோதல் (IND Vs SA Masters 2025):
சச்சின் டெண்டுகல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் கிரிக்கெட் அணியும் - ஜேக்ஸ் காலிஸ் (Jacques Kallis) தலைமையிலான தென்னாபிரிக்க மாஸ்டர்ஸ் கிரிக்கெட் அணியும் நேரடி மோதலில் ஈடுபடுகிறது. இரண்டு போட்டிகளில் வெற்றி அடைந்த இந்தியா, தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் வெற்றி அடைந்து ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில், தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி - இலங்கை அணிக்கு எதிராக களமிறங்கிய ஆட்டத்தில், இறுதியில் ஸ்ரீ லங்கா அணி வெற்றி அடைந்தது. இதனால் முதல் வெற்றிக்காக தென்னாப்பிரிக்காவும், ஹாட்ரிக் வெற்றிக்காக இந்தியாவும் இன்று பலப்பரீட்சை நடத்தும். IML T20 2025: மாஸ்டர்ஸ் லீக் 2025: கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா? உங்களின் நாயகர்கள் மீண்டும் களத்தில்.. நாளைய போட்டி விபரம்.. முழு தகவல் இதோ.!
நேரலை பார்ப்பது எப்படி? (Where to Watch IML Masters 2025 Matches)
மாஸ்டர்ஸ் லீக் போட்டிகளை கலர்ஸ் சினிபிளக்ஸ் (Colors Cineplex), கலர்ஸ் சினிபிளக்ஸ் சூப்பர்ஹிட்ஸ் (Colors Cineplex Superhits), ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar)-ல் நேரலையில் காணலாம்.
மாஸ்டர்ஸ் 2025 போட்டி அட்டவணை (Masters League 2025 Schedule):
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)