Australia ICC Champions Trophy 2025 into Finals (Photo Credit: @ICC X)

பிப்ரவரி 28, கராச்சி (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியில், இன்று (28 பிப். 2025) ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி - ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (Australia National Cricket Team Vs Afghanistan National Cricket Team), பாகிஸ்தானில் உள்ள கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் மோதிக்கொண்டது. இந்திய நேரப்படி மதியம் 02:30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில், முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது. Match Delayed Due to Rain: தடைபட்ட ஆஸி., - ஆப்கான் அணிகள் ஆட்டம்.. ஆஸியின் துரத்தலுக்கு மழை போட்ட முட்டுக்கட்டை.! 

Team Australia ICC Champions Trophy 2025 (Photo Credit: @ICC X)
Team Australia ICC Champions Trophy 2025 (Photo Credit: @ICC X)

270 ரன்கள் குவித்தும் அரையிறுதி வாய்ப்பை தவறவிட்ட ஆப்கானிஸ்தான்:

ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் இப்ராஹிம் 28 பந்துகளில் 22 ரன்கள், செடிகுல்லாஹ் 95 பந்துகளில் 85 ரன்கள், ஹஸ்மதுல்லா 49 பந்துகளில் 20 ரன்கள், ஓமர்சாய் 63 பந்துகளில் 67 ரன்கள் அதிகபட்சமாக அடித்து இருந்தனர். ஆஸ்திரேலிய அணியின் சார்பில் பந்துவீசிய வீரர்களில் ஸ்பென்சர், ஆடம் ஜாம்பா தலா 2 விக்கெட்டுகள், பென் ட்வர்ஷுய்ஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தி இருந்தனர். இதனால் 274 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்சில் 12.5 வது ஓவரில், 1 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 109 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, திடீரென வானிலை மாறி கடுமையான மழை குறுக்கிட்டது. சுமார் 2 மணிநேரத்தை கடந்து மழை தொடர்ந்த காரணத்தால், ஆட்டம் ரதஹனதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிரிவில் முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டது. மூன்றாவது இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் அணி, இன்றைய போட்டியில் வெற்றி அடைந்து முன்னேறி அரையிறுதியை உறுதி செய்யலாம் என காத்திருந்த வேளையில், மழை குறுக்கிட்டு ஆப்கானின் வாய்ப்பை தட்டிச்சென்றது. Rahmanullah Gurbaz: ஸ்பென்சரா? மிட்செலா? ஒரேயொரு யாக்கரில் ஆப்கானிஸ்தானின் முக்கிய விக்கெட் காலி..!

ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது:

ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் ஆட்டம் கைவிடப்பட்டது:

ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் பிரத்தியேக விடியோவை இங்கு காணவும் (Australia Vs Afghanistan Highlights):