SRH Vs MI: 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிய மும்பை அணி.. சொந்த மண்ணில் சுருண்ட ஹைதராபாத்..!
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாசை வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், இறுதியில் அதன் இலக்கை எட்டிப்பிடிக்க வழி இன்றி தோல்வியை தழுவியது.
ஏப்ரல் 19, ஹைதராபாத் (Cricket News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைத்ராபாத் நகரில் அமைந்திருக்கும் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் (Rajiv Gandhi International Cricket Stadium, Hyderabad) மைதானத்தில், நேற்று ஐ.பி.எல் 2023 (IPL 2023) போடத்தொடரின் 25வது ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை மும்பை அணி (Sun Rises Hyderabad Vs Mumbai Indians) எதிர்கொண்டது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் டாப்ஸை வென்ற ஹைத்ராபாத் அணியினர் (SRH Team) பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதனால் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி (MI Team) 20 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தனர். Vivo X90 Pro Flagship: விவோ எக்ஸ் 90 மாடல் மொபைல் விற்பனை தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; விவோ பயனர்களுக்கு உற்சாக செய்தி.!
அதிகபட்சமாக மும்பை அணி பேட்டிங்கில் கேமரூன் 40 பந்துகளில் 64 ரன்களும், திலக் வர்மா 17 பந்துகளில் 37 ரன்களும், ரோஹித் 18 பந்தங்களில் 28 ரன்களும், இஷான் 31 பத்திகளில் 38 ரன்களும் எடுத்திருந்தனர். பந்துவீச்சில் எஸ்.ஆர்.எச் அணி சார்பாக மேக்ரோ 2 விக்கெட், புவனேஸ்வர் மற்றும் நடராஜன் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
மறுமுனையில் பேட்டிங் ஆடிய சன் ரைஸஸ் அணியில் மயங்க் 41 பந்துகளில் 48 ரன்களும், மெக்ராம் 17 பந்துகளில் 22 ரன்களும், க்ளாஸென் 16 பந்துகளில் 36 ரன்களும் அடித்திருந்தனர். பிற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களின் வெளியேறினர்.
மொத்தமாக 19.5 ஓவரில் தனது 10 விக்கெட்டுகளையும் இழந்த சன் ரைஸஸ் அணியினர், 178 ரன்கள் அடித்து தோல்வியை அடைந்தனர். மும்பையின் பந்துவீச்சை பொறுத்தமட்டில் ஜேசன், ரிலீஸ், பியூஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஜுன் மற்றும் கேமரூன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.