IPL 2023: ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என கலைகட்டப்போகும் ஐ.பி.எல் போட்டிகளில் என்ன சந்தேகம்?.. முழு விபரங்கள் உங்களுக்காக இதோ..!
இந்திய பிரீமியர் லீக் 2023 போட்டிகள் வெள்ளிக்கிழமையான இன்று, மார்ச் 31 ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
மார்ச் 31, (Cricket News): கடந்த வாரத்தில் நிறைவு பெற்ற முதல் மகளிர் பிரீமியர் (WPL) லீக்கை தொடர்ந்து, இன்று ஐ.பி.எல் (IPL) 16-வது சீசன் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த ஆட்டம் 2019ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் நல்ல வரவேற்பை பெற தொடங்கியுள்ளது. ஐ.பி.எல் 2023ம் போட்டியின் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
74 ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று இரவு இந்திய நேரப்படி 07:30 மணியளவில் தொடங்குகிறது. அகமதாபாத் நகரில் இருக்கும் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து தொடங்கும் ஆட்டத்தை முன்னிட்டு பிரம்மாண்ட தொடக்க விழாவும் நடைபெறுகின்றன. இந்த தொடக்க விழா இணையவழியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் விளையாட்டு நிகழ்ச்சிகளை தொடங்க ரஷ்மிகா மந்தனா, தமன்னா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு ஐ.பி.எல் தொடக்க விழா நடைபெற்ற நிலையில், 2019 ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் காரணமாக தொடக்க விழா ஏற்பாட்டாளர்களால் இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன. Vijay Yesudas: பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸின் வீட்டில் 60 சவரன் நகைகள் திருட்டு.. காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார்.!!
அதனைத்தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக 2020, 2021, 2022 ம் ஆண்டுகளில் எந்த விதமான அத்தொடக்க விழாவும் நடைபெறவில்லை. இதனால் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பின்னர் தொடக்க விழா பி.சி.சி.ஐ மற்றும் டாடா-வின் ஐ.பி.எல் நிர்வாகத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ரஷ்மிகா மற்றும் தமன்னாவின் நடனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாலிவுட் பாடகர் அரிஜித் சிங்-கின் பாடல் இசைக்கச்சேரியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி இரவு 07:30 மணிக்கு தொடங்குகிறது என்பதால், கொண்டாட்டங்கள் 06:00 மணியளவில் தொடங்குகின்றன. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. Viacom18 Network டிஜிட்டல் உரிமையை பெற்று, Jio Cinema App மூலமாக இலவச நேரடி ஒளிபரப்பு பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகிறது
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)