CSK Vs DC Highlights: வின்டேஜ் தோனி வந்தும் வெற்றி வரலையேப்பா.. வெறித்தனமான ரசிகர்களின் உற்சாகத்துடன் தோல்வியடைந்த சென்னை அணி..!
சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு இடையேயான ஆட்டத்தில், இறுதியில் சென்னை அணி போராடி தோற்றாலும், மைதானத்தில் தோனி களமிறங்கியதால் ரசிகர்கள் ஆரவாரமடைந்தனர்.
ஏப்ரல் 01, விசாகப்பட்டினம் (Sports News): 2024 ஐபிஎல் தொடரின் (IPL 2024) 13வது ஆட்டம், நேற்று விசாகப்பட்டினத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் - சென்னை சூப்பர் கிங்ஸ் (DC Vs CSK) அணியும் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்திருந்தது. டெல்லி அணியின் சார்பில் விளையாடியவர்களில் பிரித்வி ஷா 27 பந்துகளில் 43 ரன்கள் அடித்திருந்தார். டேவிட் கவர்னர் 35 பந்துகளில் 52 ரன்கள் அடித்து விளாசி இருந்தார். ரிஷப் பன்ட் 32 பந்துகளில் 51 ரன்கள் அடித்திருந்தார். சென்னை அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் மாதேசா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். Cylinder Price April 2024: அடிசக்க.. 19 கிலோ வணிக சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு உற்சாக செய்தி; சிலிண்டர் விலை குறைப்பு.!
டெல்லி அணி வெற்றி: இதனையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பின் ரகானே - மிச்சல் ஆகியோர் அடித்து ஆடியதால் அணியின் ஸ்கோர் உயர தொடங்கியது. நேற்றைய ஆட்டத்தில் அதிகபட்சமாக ரகானே 30 பந்துகளில் 45 ரன்னும், மிச்சல் 26 பந்துகளில் 34 ரன்னும், ஜடேஜா 17 பந்துகளில் 21 ரன்னும், தோனி 16 பந்துகளில் 37 ரன்னும் அடித்திருந்தார். இறுதியில் களமிறங்கிய தோனி சிக்ஸர் மற்றும் பவுண்டரி மழைகளை பொழிய வைத்து அசத்தி இருந்தார். எனினும் சென்னை அணி ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. Vintage Dhoni on IPL 2024: நொடியில் ஜாலம்.. வின்டேஜ் நிகழ்வுகளை நேரில் செய்து அசத்திய தோனி; பூரித்துப்போன ரசிகர்கள்., அசத்தல் காணொளி வைரல்.!
இன்று நடைபெறவுள்ள ஆட்டம்: ஆட்டநாயகனாக டெல்லி அணியை சார்ந்த கலில் அகமத் தேர்வு செய்யப்பட்டார். இவர் தான் வீசிய நான்கு ஓவர்களில் எதிரணியை 21 ரன்கள் மட்டும் அடிக்கவிட்டு, இரண்டு விக்கெட் எடுத்திருந்தார். முகேஷ் குமார் சென்னை அணியின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஐபிஎல் தொடரின் 14வது ஆட்டம் இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே (MI Vs RR) மாலை 07:30 மணியளவில் மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை ஜியோ சினிமா (Jio Cinema App) செயலி வாயிலாக நேரலையில் இலவசமாக கண்டு களிக்கலாம்.
மரண மாஸ் காண்பித்த தோனி:
வின்டேஜ் தோனி:
2004 ஆ 2025 ஆ?..