மார்ச் 27, சென்னை (Sports News): ஐபிஎல் 2024 (IPL 2024) கிரிக்கெட் தொடரின் ஏழாவது ஆட்டம், நேற்று சென்னையில் உள்ள மா.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - குஜராத் டைட்டன்ஸ் (CSK Vs GT) அணியும் மோதிக்கொண்டன. ஆட்டத்தின் தொடக்கத்தில் பேட்டிங் செய்த சென்னை அணி அபார ரன்கள் குவிப்பு மூலமாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்திருந்தது. அணியின் சார்பில் விளையாடிய ருத்ராஜ் 36 பந்துகளில் 46 ரன்னும், ரச்சின் ரவிந்திரா 20 பந்துகளில் 46 ரன்னும், சிவம் டியூப் 23 பந்துகளில் 51 ரன்னும் அதிகபட்சமாக அடித்து விளாசி இருந்தனர். பந்துவீச்சை பொறுத்தமட்டில் குஜராத் அணியின் சார்பில் விளையாடியவர்களில் ரஷித் கான் இரண்டு விக்கெட்டும், சாய் கிஷோர், ஜான்சன், மோஹித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர்.
படுதோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ்: இதனைடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி தடுமாறியதால் அணியின் தோல்வி உறுதியானது. குஜராத் அணியின் சார்பில் விளையாடிய சாகா 17 பந்துகளில் 21 ரன்னும், சாய் சுதர்சன் 31 பந்துகளில் 37 ரன்னும், டேவிட் மில்லர் 16 பந்துகளில் 21 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால், 20 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்ட முடியாத குஜராத் அணி எட்டு விக்கெட்டை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் தீபக் சாகர், ரகுமான், தேஷ்பாண்டே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். மிச்சல், மற்றும் பதிரானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். Comedian Lollu Sabha Seshu Passes Away: நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ மறைவு.. ரசிகர்கள் இரங்கல்..!
புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதலிடம்: ஆட்டத்தின் முடிவில் சென்னை அணி சுமார் 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் சென்னை அணிக்கு புள்ளி பட்டியலில் முதலிடமும் கிடைத்துள்ளது. சென்னை அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் இரண்டிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளை பெற்று, ரன் ரேட் விகிதத்தில் +1.979 மதிப்பை பெற்றுள்ளது. இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் - மும்பை இந்தியன்ஸ் (SRH Vs MI) அணிக்கும் இடையேயான ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை ஜியோ சினிமா (Jio Cinema App) செயலி வாயிலாகவும், ஸ்போர்ட் 18, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வாயிலாக நேரலையில் வீட்டிலிருந்து பார்க்கலாம்.
இந்த ஆட்டத்தின்போது, தோனி விக்கெட் கீப்பிங்கில் தனது இளமைகாலத்து செயலை ஒருகணம் வெளிப்படுத்தி விக்கெட் எடுத்து அசத்தி இருந்தார். இதுகுறித்த காணொளியும் வெளியாகி வைரலாகி வருகிறது. மைதானத்தில் ஆட்டத்தை நேரில் பார்த்தவர்கள் பலரும், தோனியின் நொடிக்கும் குறைவான வேகத்தில் நடந்த செயலை பார்த்து பரவசம் அடைந்தனர்.
இளமை காலத்து தோனி போல அசத்தல் செயல்பாடு:
𝗩𝗶𝗻𝘁𝗮𝗴𝗲 𝗠𝗦𝗗 😎
An excellent diving grab behind the stumps and the home crowd erupts in joy💛
Head to @JioCinema and @StarSportsIndia to watch the match LIVE#TATAIPL | #CSKvGT pic.twitter.com/n5AlXAw9Zg
— IndianPremierLeague (@IPL) March 26, 2024
அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய ரவீந்திரா:
Safe hands all around 💪
Rachin Ravindra takes his third catch of the evening! 🙌
Head to @JioCinema and @StarSportsIndia to watch the match LIVE #TATAIPL | #CSKvGT pic.twitter.com/zTe5BtDKRN
— IndianPremierLeague (@IPL) March 26, 2024
2 ஆட்டங்களில் இரண்டிலும் வெற்றிகண்ட சென்னை அணி:
2⃣ in 2⃣ for Chennai Super Kings 👏👏
That's some start to #TATAIPL 2024 for the men in yellow 💛
Scorecard ▶️ https://t.co/9KKISx5poZ#TATAIPL | #CSKvGT | @ChennaiIPL pic.twitter.com/njrS8SkqcM
— IndianPremierLeague (@IPL) March 26, 2024