Padikkal Helmet Hits by Boult Fire Ball: படிக்கலின் ஹெல்மட்டை பதம்பார்த்த போல்ட்டின் பந்து: ரசிகர்களை குலைநடுங்கவைத்த சம்பவம்.! போராடி வெற்றிகண்ட ராஜஸ்தான்..!
தனது சொந்த மண்ணில் முதல் வெற்றியை தக்கவைத்து கொண்டாட்டத்தில் அணியினர் இருக்கின்றனர். ஆட்டத்தில் நடந்த சுவாரசியங்கள் மற்றும் ரன்கள் விபரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
மார்ச் 24, ஜெய்ப்பூர் (Sports News): 2024 ஐபிஎல் தொடர் (IPL 2024) கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கிய நடைபெற்று வருகிறது. தற்போது வரை மூன்று ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், மூன்றாவது நாளான இன்று மதியம் 03:30 மணி அளவில், ஜெய்பூரில் உள்ள மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் - லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கும் (RR Vs LSG) இடையே பலப்பரிட்சை நடந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்களில் சஞ்சீவ் சாம்சன் 52 பந்துகளில் 82 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். ரியான் பிரயாக் 29 பந்துகளில் 43 ரன்கள் அதிகபட்சமாக அடித்திருந்தார். மொத்தமாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழந்த ராஜஸ்தான் ராயல் அணி 193 ரன்கள் சேர்த்தது. பந்துவீச்சை பொறுத்தமட்டில் நவீன் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். Abishek Porel Destructive Batting: அதிரடி காட்டிய இளம் வீரர் – கடைசி ஓவரில் வெளுத்து வாங்கிய அபிஷேக் போரெல்..!
லக்னோ அணி ரன்கள் (Lucknow Super Giants) குவிப்பு நிலவரம்: அதனைத் தொடர்ந்து, மறுமுனையில் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி களம் இறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரரான குயின்டன் காக் 5 பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். பின் நின்று விளையாடிய கேஎல் ராகுல் 44 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்திருந்தார். தேவதுத் படிக்கல் மூன்று பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல் போல்ட் அவுட் ஆகிய வெளியேறினார். David Warner Unbelievable Six: ஒரேயொரு ஷாட்.. மொத்த மைதானமும் ஆச்சரியத்துடன் ஆவாரம்: ரசிகர்களை மிரளவிட்ட டேவிட் வார்னரின் சிக்ஸ்.! வீடியோ உள்ளே.!
தீபக் கோடா 13 பந்துகளில் 26 ரன்கள் அடித்திருந்தார், நிகோலஸ் பூரான் 41 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்தார். இறுதி ஓவர் வரை ரசிகர்களை பதைபதைப்புடன் போட்டியில் மும்மரமாக கவனிக்க வைத்த வீரர்கள் தொடர்ந்து அணியின் வெற்றிக்காக போராடி வந்தனர். இறுதியில் லக்னோ அணிக்கு தோல்வியே மிஞ்சியது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு லக்னோ அணி 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி (Rajasthan Royals) 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிகண்டது. Chewing Gum Helps to Find Rape Accuse: 19 வயது இளம்பெண் கற்பழித்துக்கொலை.. 40 ஆண்டுகள் கழித்து குற்றவாளி சிக்கியது எப்படி?.. விபரம் உள்ளே.!
ரசிகர்களை பதறவைத்த போல்டின் அனல்பறந்த பந்துவீச்சு: இதில், தேவதூத்பாடிகள் (Devdutt Padikkal) பேட்டிங் செய்தபோது போல்டின் பந்துவீச்சு கடுமையாக இருந்தது. அவர் பந்தை சுழற்றி அதிவேகத்தில் வீசியபோது, தேவதூத் படிகலின் தலைக்கவசம் உடைந்து போனது. இதனால் மைதானத்தில் திரண்டு இருந்த ரசிகர்கள் அனைவரும் ஒரு கணம் பதற்றத்தில் நடுநடுங்கிப் போன நிலையில், நல்வாய்ப்பாக படிக்கலுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அவர் தொடர்ந்து தனது அடுத்த பந்து எதிர்கொண்ட போது, போல்ட் அவுட் ஆகி வெளியேறினார்.
படிக்கலின் ஹெல்மட் உடைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்பட காட்சிகள்:
விக்கெட்டை இழந்த படிக்கல்: