மார்ச் 23, சண்டிகர் (Sports News): ஐபிஎல் 2024-ஆம் ஆண்டு (IPL 2024) கிரிக்கெட் தொடர் நேற்று சிறப்பாக தொடங்கியது. அதில் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதின. இதில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்றைய தினம் இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மாலை 3.30 மணிக்கும், இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கும் தொடங்குகிறது. Weather Update Today: 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து கொளுத்தும் வெயில் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தற்போது, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்லாப்பூரில் சுமார் 33 ஆயிரம் இருக்கைகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் (PBKS Vs DC) பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி அவுட் ஆகி வெளியேறினர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேற, 18.3 ஓவர்களில் 147-8 என்ற நிலையில் டெல்லி அணி தடுமாறியது. இறுதியில் இம்பேக்ட் வீரராக வந்த அபிஷேக் போரெல் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 32 ரன்களை அடித்து நொறுக்கினர். குறிப்பாக, கடைசி ஓவரை வீசிய ஹர்சல் படேல் பந்துவீச்சில் 4,6,4,4,6,w1 என அதிரடியாக விளையாடி டெல்லி அணியின் ஸ்கோர்போர்டை உயர்த்தினார். அந்த ஓவரில் மட்டும் 25 ரன்களை குவித்து டெல்லி அணிக்கு நம்பிக்கை அளித்தார். டெல்லி அணியில் அதிகபட்சமாக சாய் ஹோப் 33 ரன்களும், அபிஷேக் போரெல் 32 ரன்களும் எடுத்தனர். இறுதியில், டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 174-9 குவித்தது.