MI Vs RCB Highlights: அடித்து நொறுக்கிய மும்பை; சுக்கு நூறாகிப்போன பெங்களூர்.. அசத்தல் வெற்றியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி.!
பெங்களூர் - மும்பை அணிகளுக்கு இடையேயான 25வது போட்டியில், பெங்களூர் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தாலும் மும்பை அணி எளிதில் இலக்கை நெருங்கி வெற்றி பெற்றது.
ஏப்ரல் 12, மும்பை (Sports News): ஐபிஎல் 2024 (IPL 2024) கிரிக்கெட் தொடரின் 25வது ஆட்டம், நேற்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (MI Vs RCB) அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்திருந்தது.
அடித்து நொறுக்கிய பெங்களூர்: அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் பாப் டூபிளசிஸ் 40 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். ரஜத் படிதார் 26 பந்துகளில் 50 ரன்னும், தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 53 ரன்னும் எடுத்திருந்தனர். இதையடுத்து, மறுமுனையில் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, அதிரடியாக அடித்து ஆடியதால் அணியின் வெற்றி வசமானது. Biscuit Halwa Recipe: பிஸ்கட் இருந்தா போதும்.. உடனே செய்யலாம் பிஸ்கட் அல்வா..!
மும்பை அணி அசத்தல் வெற்றி: மும்பை அணியின் சார்பில் விளையாடியவர்களில் இசான் கிசான் 34 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்தார். ரோஹித் சர்மா 24 பந்துகளில் 38 ரன்னும், சூரிய குமாரி யாதவ் 19 பந்துகளில் 52 ரன்னும் எடுத்திருந்தனர். ஆட்டத்தின் முடிவில் 15.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி அடைந்தது. இதனால் மும்பை அணியின் ரசிகர்கள் நேற்று உற்சாகமடைந்தனர்.
இன்றைய ஆட்டம் யார்-யாருக்கு? இன்று லக்னோவில் உள்ள வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (DC Vs LSG) அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் இரவு 07:30 மணியளவில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை ஜியோ சினிமா செயலியில் (Jio Cinema App) இலவசமாக நேரலையில் காணலாம்.
வெற்றியை கொண்டாடிய மும்பை ரசிகர்கள், அணியினர்:
சிக்ஸர் மழையில் நனையவைத்த சூரியகுமார் யாதவ்:
கண்ணிமைக்கும் நேரத்தில் விக்கெட்டை காலி செய்த பும் பும் பும்ரா: