MS Dhoni Hits 101 Meters Six: 101 மீட்டர் சிக்ஸ் அடித்து மைதானத்தை அதிரவைத்த தல தோனி; மிரண்டுபோன ரசிகர்கள்.!
லக்னோ அணியின் அதிரடி ஆட்டத்தினால், சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
ஏப்ரல் 20, லக்னோ (Cricket News): 2024 ஐபிஎல் (IPL 2024) தொடரின் 34வது ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்ட ஆட்டம், லக்னோவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. சென்னை அணியின் சார்பில் விளையாடியவர்களில் ரஹானே 24 பந்துகளில் 36 ரன்னும், ஜடேஜா 40 பந்துகளில் 57 ரன்னும், தோனி (MS Dhoni) 9 பந்துகளில் 28 ரன்னும் அணிக்காக சேர்த்திருந்தார். Tamil Nadu Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு.. தமிழகத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை?.!
லக்னோ அணி அசத்தல் வெற்றி: இதனையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 19 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து இலக்கை கடந்து வெற்றி அடைந்தது. லக்னோ அணியின் சார்பில் விளையாடியவர்கள் குயின்டன் டிகாக் 43 பந்துகளில் 54 ரன்னும், கேஎல் ராகுல் (KL Rahul) 53 பந்துகளில் 82 ரன்னும், நிகோலஸ் பூரான் 12 பந்துகளில் 23 ரன்னும் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். இந்த ஆட்டத்தின் நாயகனாக லக்னோ அணியை சேர்ந்த கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தின்போது தோனி இறுதியாக களமிறங்கி சிக்ஸர், பவுண்டரிகளை விளாசினார். அவர் அடித்த பந்து ஒன்று 101 மீட்டர் உயரத்தில் பறந்து 6 ரன்களை பீற்றுக்கொடுத்தது. இந்த சிக்ஸர் வீடியோ வைரலாகி வருகிறது. இன்று டெல்லி - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதனை இலவசமாக ஜியோ சினிமா செயலியில் (Jio Cinema) நேரலையில் காணலாம்.