KKR Won IPL 2024 Trophy: உப்பு-சப்பு இல்லாமல் முடிந்த ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி; கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி.. கலங்கிப்போன ஹைதராபாத்.!
இறுதிப்போட்டியில் வெற்றிக்கனியை சுவைத்த கொல்கத்தா மிகுந்த உற்சாகத்துடன் சென்னை மண்ணை விட்டு வெளியேறுகிறது.
மே 27, சென்னை (Sports News): கோலகலமான கொண்டாட்டங்களுடன் சென்னையில் கடந்த மாதம் தொடங்கிய ஐபிஎல் 2024 (IPL 2024) கிரிக்கெட் போட்டி, நேற்றுடன் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நிறைவு பெற்றது. புள்ளிப்பட்டியலின்படி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தேர்வான கொல்கத்தா அணியும், தகுச்சுற்றில் முன்னேறி இறுதிப்போட்டியில் களம்கண்ட ஹைதராபாத் அணியும் (KKR Vs SRH IPL 2024 Final) நேற்று மோதிக் கொண்டன. சென்னை, பெங்களூர், மும்பை என நட்சத்திர அணிகள் இல்லாத ஐபிஎல் தகுதிச்சுற்று மற்றும் இறுதிச்சுற்று போட்டிகள் ரசிகர்களிடம் விறுவிறுப்பை எட்டாமலேயே நிறைவு பெற்றது.
113 ரன்களில் சுருண்ட ஹைதராபாத்: ஐபிஎல் போட்டிகளை பொருத்தமட்டில் தான் நாயகனாக நினைக்கும் நட்சத்திர வீரரின் பின்னணியில் இருக்கும் அணியை வைத்து அந்த போட்டிக்கான சுவாரசியமும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், உப்பு சப்பு இல்லாமல் நேற்று நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டமும் அதன்படி அமைந்தது. தொடக்கத்தில் டாசை வென்று பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியினர், 18.3 ஓவரில் தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. TN Govt Advice to Foreign Job Travellers: வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு, தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கை; முழு விபரம் உள்ளே.!
சொதப்பிய ஹைதராபாத் வீரர்கள்: பல போட்டிகளில் அதிரடியாக அடித்தாடிய ஹைதராபாத் அணியினர், இறுதிப்போட்டியில் 113 ரன்கள் மட்டுமே எடுத்த்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை தந்தது. அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் பலரும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை இழந்து திணறிப்போயினர். தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா, டார்விஸ் ஹெட், ராகுல் திரிபாதி ஆகியோர் சொற்பரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். மார்க்கம் 23 பந்துகளில் 20 ரன்னும், ஹெயின்ரிச் 17 பந்துகளில் 16 ரன்னும் எடுத்து இருந்தார். இறுதியில் களமிறங்கிய பேட் கம்மின்ஸ் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் முடிவில் 113 ரன்கள் மட்டும் ஹைதராபாத் அணி எடுத்திருந்தது.
அசத்தல் வெற்றிபெற்ற கொல்கத்தா: இதனால் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களம் இறங்கியது. மிக எளிய இலக்காக கருதப்படும் 114 ரன்களை கொல்கத்தா அணி பத்தாவது ஓவரிலேயே சேகரித்து தனது வெற்றியை எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் களமிறங்கியவர்களில் ரகுமான் 32 பந்துகளில் 39 ரன்கள் அடித்து விளாசி இருந்தார். வெங்கடேஷ் ஐயர் 26 பந்துகளில் 52 ரன்கள் கடந்து அதிரடியாக ஆடியதைத் தொடர்ந்து, அணி 10.3 வது ஓவரில் 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரண்டு விக்கெட் மட்டுமே இழக்கப்பட்டு இருந்தது. Google Maps: கூகுள் மேப்ஸின் அப்டேட்டில் அசத்தல் அம்சங்கள்; ஏஐ பயன்பாட்டுடன் மிரளவைக்கும் விஷயங்கள்.. விபரம் உள்ளே.!
அணியின் வெற்றியைத் தொடர்ந்து, அந்த அணியின் உரிமையாளரான ஷாருக்கான் தனது அணியினரை வெகுவாக பாராட்டினார். மேலும், அணியின் ஆலோசராக செயல்பட்டு வந்த கௌதம் கம்பீர் புன்னகைத்தார். இந்த வெற்றி கொல்கத்தா அணியின் மூன்றாவது வெற்றி ஆகும். இது தொடர்பான காணொளிகள் உங்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.
வெற்றிக்கனியை எட்டிப்பிடித்த கொல்கத்தா:
வெற்றிகொண்டாட்டத்தில் அணியினர்:
அசத்திய வெங்கடேஷ் ஐயர்:
ஷாருக்கானின் அன்பு முத்தம்:
ஒருவழியாக சிரிச்சிட்டாப்ல: