RCB Vs PBKS Highlights: ஐபிஎல் 2024 தொடரில் முதல் வெற்றிக்கனியை சுவைத்தது பெங்களூர் அணி; விராட் கோலி அசத்தல் ஆட்டத்தால் கொண்டாட்டம்.!
சொந்த மண்ணில் தீரமாக விளையாடிய வீரனாய் ஜொலித்த விராட் கோலியின் அதிரடி ஆட்டம், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை முதல் வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.
மார்ச் 26, பெங்களூரு (Sports News): ஐபிஎல் 2024 (IPL 2024) தொடரில், ஆறாவது ஆட்டம் நேற்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB Vs PBKS) அணியும் மோதிக்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கத்தில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது. ஷிகர் தவான் அதிகபட்சமாக 37 பந்துகளில் 45 ரன்கள் அடித்திருந்தார். பிரசிம்ரன் சிங் 17 பந்துகளில் 25 ரன், கரன் 17 பந்துகளில் 23 ரன், ஜித்து ஷர்மா 20 பந்துகளில் 27 ரன், சாசங் சிங் 8 பந்துகளில் 21 ரன் சேர்த்து இருந்தனர். பெங்களூர் அணியின் சார்பில் பந்து வீசியவர்களில், முகமது சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர். யாஷ், ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். Genie Second Look: இனி ஜெயம் தான்.. டிக் டிக் டிக் வேகத்தில் ஜீனியாக மாறும் தனி ஒருவன்.. ஜீனி படத்தின் இரண்டாம் பார்வை வெளியீடு..!
அதிரடி காண்பித்த கோலி (Virat Kohli): இதனையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியில் தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி அதிரடியாக விளையாடி அணியின் ரன்கள் உயர்வுக்கு வழிவகை செய்தார். 49 பந்துகளில் அவர் 77 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட் ஆகி வெளியேறுனார். 11 பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர் அடித்து அசத்தியிருந்தார். ரஜத் படிதார் 18 பந்துகளில் 18 ரன்னும், தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்னும் அடித்து அசத்து இருந்தனர். ஆட்டத்தின் முடிவில் 19.2 ஓவர்களில் பெங்களூரு அணி 178 ரன்கள் எடுத்து வெற்றிகண்டது. பந்துவீச்சை பொறுத்தமட்டில் காகிஷோ மற்றும் ஹர்பிரித்த ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர். Viral Video: கல்யாணத்துக்கு வாங்க.. மொய்யும் வேணாம்.. கிப்ட்டும் வேணாம்.. வேறு ஒன்றைக் கேட்ட பாஜக பிரமுகர்..!
இன்று சிஎஸ்கே வெர்சஸ் ஜிடி: போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் நேற்று பெங்களூர் அணி தனது முதல் வெற்றியை இந்த சீசனில் கொண்டாட காரணமாக அமைந்தது. இதனால் அவர் நேற்றைய ஆட்டத்தின் சிறந்த வீரராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டங்களை ஜியோ (Jio Cinema) செயலியில் நேரலையில் இலவசமாக பார்க்கலாம். ஸ்போர்ட்ஸ் 18, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஆகிய தொலைக்காட்சியிலும் காணலாம். இன்று (26 மார்ச் 2024) அன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் (CSK Vs GT) அணிகள், சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதிக்கொள்ளும் ஆட்டம் நடைபெறுகின்றன.
போட்டியின் போது இரண்டு ரசிகர்கள் செய்த காரியம்:
சேஸிங்கை தொடங்கி வைத்த கோலி:
முதல் வெற்றிக்கனியை கொண்டாட்டத்துடன் சுவைத்த வீரர்கள்:
விக்கெட்டை வீழ்த்திய ஹர்ஷல் படேல்:
பெங்களூரு அணியின் முதல் வெற்றி:
தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டங்கள்:
தாவிப்பிடிக்கப்பட்ட கேட்ச்: