SRH Vs MI Highlights: மரண மாஸாக அடித்து நொறுக்கிய அபிஷேக் ஷர்மா.. இமாலய இலக்கு சேர்த்து, புதிய சரித்திர சாதனையுடன் வெற்றிகண்ட ஹைதராபாத் அணி.!

அதனை அதிரடி ஆட்டத்தால் சேசிங் செய்த மும்பை அணி போராடி தோற்றது.

Abhishek Sharma IPL 2024 (Photo Credit: @IPL X)

மார்ச் 28, ஹைதராபாத் (Sports News): ஐபிஎல் 2024 தொடரில், எட்டாவது போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் - மும்பை இந்தியன்ஸ் (SRH Vs MI) அணியும் மோதிக்கொண்டன. ஆட்டத்தின் தொடக்கத்தில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 277 ரன்கள் குவித்து மாபெரும் சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 263 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை முறியடிக்கப்பட்டு இருக்கிறது. Higher Burden Of Breast Cancer: பெண்களை வாட்டும் நோய்க்கு… தமிழ்நாடு, கர்நாடகாவுக்கு முதல் இரண்டிடம்.. அது என்ன நோய் தெரியுமா?.! 

ரன்களை குவித்த இருதரப்பு வீரர்கள்: ஹைதராபாத் அணியின் சார்பில் விளையாடியவர்களில் டார்விஸ் ஹெட் 24 பந்துகளில் 62 ரன்னும், அபிஷேக் ஷர்மா 23 பந்துகளில் 63 ரன்னும், கால்சன் 34 பந்துகளில் 80 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். 19 கூடுதல் ரன்கள் சேர்த்து மொத்தமாக 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி போராடி தனது தோல்வியை கண்டது. அந்த அணியின் சார்பில் களமிறங்கியவர்களில் ரோகித் சர்மா 12 பந்துகளில் 26 ரன்னும், திலக் வர்மா 34 பந்துகளில் 64 ரன்னும், டேவிட் 22 பந்துகளில் 42 ரன்னும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர். Unemployment Crisis: மக்கள் தொகையுடன் கூடும் வேலையில்லா பட்டதாரிகள்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..! 

இன்றைய போட்டி யாருக்கு? ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் மும்பை அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அமோக வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டத்தின் நாயகனாக அபிஷேக் ஷர்மா தேர்வு செய்யப்பட்டார். மார்ச் 28 ஆம் தேதியான இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் - டெல்லி கேபிட்டல் அணிக்கும் (RR Vs DC) இடையே போட்டி நடக்கிறது. இன்று மாலை 07:30 மணியளவில் தொடங்கும் போட்டியை ஜியோ சினிமா (Jio Cinema) செயலியில் இலவசமாக கண்டு ரசிக்கலாம்.

சாதனை படைத்த ஹைதராபாத் அணி:

வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா: