BAN Vs RSA 1st Test: ககிசோ ரபாடா புதிய மைல்கல்.. டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை..!

டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணிக்காக அதிவேகமாக 300 விக்கெட்கள் வீழ்த்தி ககிசோ ரபாடா புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

Kagiso Rabada (Photo Credit: @atnyuswa X)

அக்டோபர் 22, டாக்கா (Sports News): தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி (BAN Vs RSA 1st Test, Day 1) டாக்காவில் நேற்று (அக்டோபர் 21) தொடங்கியது. இப்போட்டியில் வங்கதேச அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 106 ரன்களுக்கு சுருண்டது.

இப்போட்டியில் ககிசோ ரபாடா (Kagiso Rabada) தனது முதல் விக்கெட்டினை வீழ்த்தியபோது, தென்னாப்பிரிக்க அணிக்காக புதிய சாதனை ஒன்றை படைத்தார். தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம், தென்னாப்பிரிக்க அணிக்காக 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 6-வது வீரர் ஆவார். MS Dhoni: அடுத்தாண்டு சி.எஸ்.கே.,வில் தோனி விளையாடுவாரா? சிஇஓ விஸ்வநாதன் கூறியது என்ன?!

டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்:

1. டேல் ஸ்டெயின் - 439 விக்கெட்டுகள் (93 போட்டி)

2. ஷான் பொல்லக் - 421 விக்கெட்டுகள் (108 போட்டி)

3. மக்காயா நிட்னி - 390 விக்கெட்டுகள் (101 போட்டி)

4. ஆலன் டொனால்டு - 330 விக்கெட்டுகள் (72 போட்டி)

5. மோர்னே மோர்க்கல் - 309 விக்கெட்டுகள் (86 போட்டி)

6. ககிசோ ரபாடா - 303* விக்கெட்டுகள் (65 போட்டி)*

தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 3-வது வீரர் என்ற சாதனையையும் ககிசோ ரபாடா பெற்றுள்ளார். குறைந்த பந்துகள் வீசி (11,817) 300 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். அவர் 65 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை எட்டியுள்ளார்.

ரபாடா புதிய சாதனை: