IND Vs NZ 2nd Test: முடிவுக்கு வந்த 12 வருட சாதனை.. இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தல்.., நியூசிலாந்து அபார வெற்றி..!

புனேயில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி இந்திய மண்ணில் முதல் முறையாக தொடரை கைப்பற்றியுள்ளது.

IND Vs NZ 2nd Test Day 3 (Photo Credit: @CricketNDTV X)

அக்டோபர் 26, புனே (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் (IND Vs NZ 2nd Test, Day 3) அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (அக்டோபர் 24) புனேயில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. IND Vs NZ 2nd Test: இந்தியா வெற்றிக்கு 359 ரன்கள் இலக்கு.. ஜெய்ஸ்வால்-கில் அதிரடி ஆட்டம்..!

அதன்படி, நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்களில் 259 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்பிறகு, இந்தியா முதல் இன்னிங்ஸில் 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய அணி 156 ரன்கள் எடுத்து, நியூசிலாந்தை விட 103 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. இந்நிலையில், 2-வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 69.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 255 எடுத்தது.

இந்திய அணி வெற்றிப் பெற 359 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 77 ரன்களுக்கு அவுட்டானார். அதன்பிறகு, அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தன. கடைசி கட்ட நேரத்தில் ஜடேஜா (Ravindra Jadeja) மட்டும் தனிநபராக போராடி 42 ரன்னில் அவுட் ஆனார். இந்தியா 60.2 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 113 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகனாக சிறப்பாக பந்துவீசி 13 விக்கெட்களை கைப்பற்றிய மிட்சல் சான்ட்னர் (Mitchell Santner) தேர்வு செய்யப்பட்டார். மேலும், இந்திய மண்ணில் தொடரை கைப்பற்றிய நான்காவது அணியாக சாதனை படைத்துள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் வருகின்ற நவம்பர் 01-ஆம் தேதி நடைபெறும்.

நியூசிலாந்து அணி அபார வெற்றி: