Paralympics 2024: வெள்ளி, வெண்கலம் என இந்தியாவை அடுத்தடுத்து பெருமைப்படுத்திய பாராலிம்பிக் வீரர்கள்; நிஷாத், ப்ரீத்தி சாதனை.!
உயரம் தாண்டுதல் ஆடவர் பிரிவில் வெள்ளி, ஓட்டப்பந்தயத்தில் அடுத்தடுத்து வெண்கலம் என இந்திய பாராலிம்பிக் வீரர்கள் பாரிஸ் மண்ணில் சாதனை புரிந்து வருகின்றனர்.
செப்டம்பர் 02, பாரிஸ் (Sports News): பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில், பாரா ஒலிம்பிக் போட்டிகள் 2024 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 184 நாடுகளில் இருந்து வீர்ர்-வீராங்கனைகள் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். பதக்கங்கள் வாரியாக சீனா 33 தங்கம், 27 வெள்ளி, 11 வெண்கலம் என 71 பதக்கத்துடன் முதல் இடத்திலும், பிரிட்டன் 23 தங்கம், 12 வெள்ளி, 8 வெண்கலம் என 43 பதக்கத்துடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா 8 தங்கம், 11 வெள்ளி, 8 வெண்கலம் என 27 பதக்கத்துடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கத்துடன் 27 வது இடத்தில் இருக்கிறது.
வெள்ளி, வெண்கலம் பெற்று அசத்தல்:
இந்நிலையில், ஆடவர் உயரம் தாண்டுதல் T47 பிரிவில், 2.04 மீட்டர் உயரம் தாண்டிய நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார். அவருடன் களம்கண்ட அமெரிக்கா வீரர் ரோட்ரிக் டவுன்சென்ட்-ராபர்ட்ஸ், தொடர்ந்து 3 வது முறையாக 2.08 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். அதேபோல, 200 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் பிரீத்தி பால் வெண்கலப்பதக்கம் வென்றார். ஏற்கனவே இவர் 100 மீட்டர் அளவிலான ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கம் வென்ற நிலையில், 200 மீட்டர் பிரிவிலும் வெண்கலம் வென்று அசத்தி இருக்கிறார். Formula 4 Race: கார் ரேஸுல நானும் கலந்துக்கலாமா? பார்முலா 4 பந்தயப்பாதையில் பவனி வந்த நாய்.!
குடியரசுத்தலைவர் & பிரதமர் பாராட்டு:
இந்தியாவுக்கு அடுத்தடுத்து வெள்ளி, வெண்கலப்பதக்கத்தை வென்றுகொடுத்த தங்கங்களுக்கு தேசிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, வெற்றியாளர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார். அதேபோல, இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியும் "இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி" என பாராட்டி இருக்கிறார்.
ப்ரீத்தி பாலை பிரதமர் மோடி பாராட்டி பகிர்ந்த எக்ஸ் பதிவு: