Paris Olympics 2024: ஈட்டி எறிதலில் மீண்டும் வெற்றி; ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்ற நீரஜ் சோப்ரா.!
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா பெரிதும் எதிர்பார்த்த நீரஜ் சோப்ரா, மீண்டும் உலகளவில் கவனிக்கப்பட்டு வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கி இருக்கிறார்.
ஆகஸ்ட் 09, பாரிஸ் (Sports News): பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் (Paris Olympics 2024) போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 10,500 க்கும் அதிகமான உலகளாவிய வீரர்-வீராங்கனைகள் 205 நாடுகளில் இருந்து கலந்துகொண்டனர். 320 க்கும் அதிகமான விளையாட்டு பிரிவுகளில் இவர்கள் விளையாடி, தங்களின் நாட்டுக்கான பதக்கத்தை வென்று வருகின்றனர். ஒவ்வொரு வெற்றியும் அந்தந்த நாட்டின் கௌரவங்களாக கவனிக்கப்படுகிறது.
64 வது இடத்தில் இந்தியா:
ஆகஸ்ட் 11ம் தேதியுடன் நிறைவுபெறும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள், தனது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. பதக்கப்பட்டியலில் அமெரிக்கா 30 தங்கம், 38 வெள்ளி, 35 வெண்கலம் என 103 புத்தகத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது. சீனா 29 தங்கம், 25 வெள்ளி என மொத்தமாக 73 பதக்கத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 18 தங்கம், 14 வெள்ளி என மொத்தமாக 45 பதக்கத்துடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தியா 64 வது இடத்தில் 1 வெள்ளி, 4 வெண்கலத்துடன் இருக்கிறது. Nayab Saini on Vinesh Phogat: "தங்கம் வெல்லவில்லை என்றாலும் அவள் எங்களின் தங்கமகளே!" - வினேஷ் போகத்துக்கு உரிய மரியாதை; ஹரியானா அரசு அதிரடி.!
வெள்ளியை வென்ற தங்கமகன்:
இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற நீரஜ் சோப்ரா (Neeraj Chopra), பாரிஸ் ஈட்டி எறிதலில் 89.45 மீட்டர் அளவில் ஈட்டியை எய்து இரண்டாவது இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை இந்தியாவுக்காக பெற்றுத்தந்தார். அதேபோல, அவருடன் போட்டியிட்ட பாகிஸ்தான் நாட்டின் வீரர் அர்ஷத் நீதம், 92.97 மீட்டர் அளவில் ஈட்டியை எய்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதன் வாயிலாக பாக். வீரர் ஈட்டி எறிதலில் புதிய ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார். நீரஜ் சோப்ரா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார். கடந்த முறை தங்கம் வென்றவர், இம்முறை வெள்ளியை தட்டிப்பறித்துள்ளார்.
குடியரசுத்தலைவர், பிரதமர் பாராட்டு:
இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கத்தை பெற்றுத்தந்த தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு, இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, "நீரஜ் சோப்ராவின் சாதனை இந்தியாவை பெருமையடைய செய்கிறது" என தனது பாராட்டுகளை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி "மீண்டும் திறமையை வெளிப்படுத்தி பதக்கம் வென்ற சோப்ராவுக்கு வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.