AUS Vs NAM: தொடங்கிய வேகத்தில் முடிந்த ஆஸி - நமீபியா கிரிக்கெட் போட்டி; 74 ரன்களை எடுத்து 6 ஓவருக்குள் ஆஸி., அணி அமோக வெற்றி.!
இன்று காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் விறுவிறுப்புடன் முடிந்த ஆட்டத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஜூன் 12, நியூயார்க் (Sports News): அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 (T20 WORLD CUP 2024) தொடரில், இன்று காலை 06:00 மணியளவில் இந்திய நேரப்படி நமீபியா - ஆஸ்திரேலியா (NAM Vs AUS) அணிகள் மோதிக்கொண்ட 24வது ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாசை வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிச்சல், பௌலிங் தேர்வு செய்தார். இதனையடுத்து, முதலில் நமீபியா அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்கள், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் ரன்களை குவிக்க வழி இன்றி திணறிப் போயினர். Sand Truck Overturned: தறிகெட்டு குடிசைக்குள் புகுந்து கவிழ்ந்த மணல் லாரி; உடல் நசுங்கி குடுமப்த்தினர் 8 பேர் பலி.! நெஞ்சை ரணமாக்கும் சோகம்.!
73 ரன் இலக்கும்; அசத்திய ஆசி., அணியும்:
அந்த அணியின் சார்பில் விளையாடுபவர்களில் மைக்கேல் 10 பந்துகளில் 10 ரன்னும், ஏராஸ்மஸ் 43 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். பிற எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்பனங்களில் அடுத்தடுத்த வெளியேறியதால், 17 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழந்த நமீபியா அணி 72 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் ஆடம் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். ஜோஸ், மார்க்கஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தனர். இதனால் 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று மிகமிக எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.
6 ஓவருக்குள் அசத்தல் வெற்றி:
களமிறங்கிய வேகத்தில் அதிரடியாக விளையாடிய ஆஸி அணி, 6 ஓவர்க்குள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. முதலில் களமிறங்கிய டேவிட் வார்னர் 8 பந்துகளில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 20 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறிவிட, பின் களமிறங்கிய ஹெட் 17 பந்துகளில் 34 ரன், மிட்சல் 9 பந்துகளில் 18 ரன்னும் எடுத்து அசத்தியிருந்தனர். இதனையடுத்து, 5.4 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி, 74 ரன் எடுத்து தனது இலக்க எட்டி அமோக வெற்றி அடைந்தது. போட்டி தொடங்கிய வேகத்தில் விறுவிறுப்புடன் நிறைவு பெற்ற நிலையில், இந்த விருப்பத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டேவிட் வார்னரின் அசத்தல் சிக்ஸ்:
எளிதாக வெற்றியை அடைந்த ஆஸ்திரேலியா அணி: