Men's Senior National Hockey Championship 2024: தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2024; தமிழ்நாடு - மத்திய பிரதேசம் ஆட்டம் டிரா..!

நேற்று நடைபெற்ற தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாடு-மத்திய பிரதேசம் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

Men's Senior National Hockey Championship 2024 (Photo Credit: @backiya28 X)

நவம்பர் 06, சென்னை (Sports News): ஆடவருக்கான 14வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி (Men's Senior National Hockey Championship), சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி தனது 2வது லீக் (TN Vs MP) ஆட்டத்தில், நேற்று (நவம்பர் 05) மத்திய பிரதேசத்துடன் மோதியது. Virat Kohli's Net Worth: அசந்து போக வைக்கும் விராட் கோலியின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா? வெளியான தகவல்.!

தமிழ்நாடு அணி சார்பில் செல்வராஜ் கனகராஜ் (42வது நிமிடம்), சண்முகவேல் (53வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மத்திய பிரதேச அணி தரப்பில் குமார் கனோஜியா (35வது நிமிடம்), அக்சய் துபே (42வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதன்காரணமாக, இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

மற்ற ஆட்டங்களில் டெல்லி 6-0 என்ற கோல் கணக்கில் ஜம்மு-காஷ்மீர் அணியையும், கர்நாடகா அணி 5-1 என்ற கோல் கணக்கில் சண்டீகரையும், பெங்கால் அணி 10-0 என்ற கோல் கணக்கில் அசாம் அணியையும், ஆந்திரா 13-0 என்ற கோல் கணக்கில் அந்தமான் மற்றும் நிக்கோபார் அணியையும் வீழ்த்தின.