AUS A Vs IND A: இந்தியா ஏ அணியுடன் ஆஸ்திரேலியா புறப்பட்ட தமிழக வீரர்கள்.. புகைப்படம் வைரல்..!
முதல் தர தொடரில் பங்கேற்கும் இந்திய ஏ அணி, நேற்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது.
அக்டோபர் 25, மும்பை (Sports News): ஆஸ்திரேலியாவில் இந்திய ஏ அணி, இரண்டு போட்டிகள் கொண்ட முதல் தர தொடரில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலிய ஏ (Australia A Vs India A) அணிக்கு எதிரான முதல் போட்டி அக்டோபர் 31-நவம்பர் 03 வரை மக்காயில் நடக்கவுள்ளது. இதன் இரண்டாவது போட்டி மெல்போர்னில் நவம்பர் 07 முதல் 10-ஆம் தேதி வரை நடக்கும். இதற்கான இந்திய ஏ அணி கேப்டனாக ருதுராஜ் (Ruturaj Gaikwad) நியமிக்கப்பட்டுள்ளார். அபிமன்யு ஈஸ்வரன் துணைக் கேப்டனாக உள்ளார். மேலும் தமிழகத்தின் சாய் சுதர்சன் (Sai Sudharsan), பாபா இந்திரஜித்தும் (Baba Indrajith) அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில், இந்திய ஏ அணி நேற்று (அக்டோபர் 24) ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்றது. CM Trophy 2024: 2024 முதலமைச்சர் கோப்பையை தட்டிச்சென்றது சென்னை.. உங்கள் மாவட்டத்தில் வெற்றி நிலவரம் என்ன?.. முழு விபரம் உள்ளே.!
இந்தியா - இந்தியா ஏ மோதல்:
இதனிடையே ஆஸ்திரேலிய மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 5 போட்டி கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி (Border-Gavaskar Trophy) தொடரில் நவம்பர் 22 முதல் 2025, ஜனவரி 07 வரை பங்கேற்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி, இந்திய ஏ அணிக்கு எதிராக 3 நாள் பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. இப்போட்டி, நவம்பர் 15 முதல் 17 வரை நடைபெறும்.
இந்திய ஏ அணி வீரர்கள்:
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணைக் கேப்டன்), சாய் சுதர்சன், பாபா இந்திரஜித், தேவ்தத் படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, ரிக்கி புய், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் போரல், முகேஷ் குமார், கலீல் அகமது, யாஷ் தயால், நவ்தீப் சைனி, மானவ் சுதர், தனுஷ் கோட்யான்