Rafael Nadal Announces Retirement: 24 ஆண்டு கால பயணம் முடிவு.. டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஓய்வு..!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஓய்வு குறித்து தெரிவித்துள்ளார்.

Tennis player Rafael Nadal (Photo Credit: @kenyanmiror X)

அக்டோபர் 11, மாட்ரிட் (Sports News): டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் (Rafael Nadal) தொழில்முறை டென்னிஸ் (Tennis) விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் நடைபெறும் டேவிஸ் கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 38 வயதான அவர், இதுவரை ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதில், 14 பட்டங்கள் பிரெஞ்சு ஓபன் தொடரில் வென்றதாகும். சுமார் 20+ ஆண்டு காலம் களிமண் களத்தில் தனது ஆட்டத்தின் மூலம் டென்னிஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தியவர். கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றிருந்தார். Team India T20i: பெண்கள் டி20 Vs ஆண்கள் டி20 .. 80+ ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி.. முழு விபரம் உள்ளே.!

இந்நிலையில், அடுத்த மாதம் வருகின்ற டேவிஸ் கோப்பை (Davis Cup) தொடருடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'நான் தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பயணம் மிக கடுமையாக இருந்தது. கடந்த சில வருடங்கள், குறிப்பாக கடந்த 2 வருடங்கள் கடினமாக இருந்தன. வரம்புகள் இல்லாமல் என்னால் விளையாட முடிந்தது என்று நான் நினைக்கவில்லை. சில எல்லைகளுக்கு உட்பட்டு நான் விளையாட வேண்டி உள்ளது' என அதில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.