Indian Cricket Telecast Rights: இந்திய அணியின் கிரிக்கெட் ஆட்டத்திற்கான டிஜிட்டல் உரிமையை பெற்றது விகாம் 18 குழுமம்..!
இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை கொண்ட ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான டிஜிட்டல் உரிமைகள் இழக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அடுத்த சோகம் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 31, புதுடெல்லி (Cricket News): இந்திய அளவில் மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை நாம் நேரலையில் முன்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கண்டு களித்திருப்போம். தற்போது செல்போன் மூலமாக ஹாட்ஸ்டார், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா உட்பட பல்வேறு செயலிகளின் வழியே கண்டுகளிக்கிறோம்.
இந்திய அளவில் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் அமைப்பாளர்களை ஒருங்கிணைக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து ஏலம் மூலமாக ஒப்பந்த புள்ளிகளை கோரும். போட்டித்தன்மை கொண்ட ஒப்பந்தப்புள்ளியாளர்கள் இதில் பங்கேற்பார்கள்.
அதேபோல, சமீபத்தில் இந்திய அளவில் இந்திய அணிகள் எதிர்கொள்ளும் போட்டிகளை ஒளிபரப்பு செய்யவும், அதன் டிஜிட்டல் ஒளிபரப்பு நடவடிக்கைக்கும் ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முன்பாக அதனை டிஸ்னி ஸ்டார் (Disney Star Hotstar) நிறுவனம் கைப்பற்றி இருந்தது. Tractor Bus Collision: டிராக்டர் – அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து; 16 பயணிகள் படுகாயம்..!
தற்போது அவை மாற்றப்பட்டுள்ளன. முன்னதாகவே ஐ.பி.எல் போட்டிகளை ஜியோ சினிமா நிறுவனம் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றி இருந்தது. இது ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு சரிவை தந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு மரண அடி கிடைத்துள்ளது.
அதாவது, இந்தியாவில் நடைபெறும் இந்திய அணிகளின் விளையாட்டுகளின் ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை Viacom 18 குழுமம் கைப்பற்றி இருக்கிறது. Sports 18 தொலைக்காட்சி மூலமாக கிரிக்கெட் போட்டிகளை இனி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரூ.5,963 கோடி தொகைக்கு ஏலம் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.