Kagiso Rabada, Marco Jansen: கேட்ச் பிடிப்பதில் வேகம்.. பவுண்டரில் லைனில் அந்தரத்தில் மோதிக்கொண்ட வீரர்கள்; வெஸ்ட் இண்டீஸ் - தென்னாபிரிக்கா அணிகள் ஆட்டத்தில் சுவாரஷ்யம்.!

வெஸ்ட் இண்டீஸ் - தென்னாபிரிக்க அணிகள் இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டியில், காகிஸோ - மார்கோ ஆகியோர் கேட்ச் பிடிக்க முயற்சித்து அந்தரத்தில் மோதி விழுந்தனர்.

Kagiso Rabada, Marco Jansen Catch (Photo Credit: @Cricketracker X)

ஜூன் 24, அன்டிகுவா (Sports News): அமெரிக்காவில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 (T20 WORLD CUP 2024) போட்டியில், சூப்பர் 8 ஆட்டங்கள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. இந்த ஆட்டத்தின் 10 வது போட்டி, இன்று ஆன்டிகுவாவில் உள்ள சர் விவான் ரிச்சர்ட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது.

தென்னாபிரிக்க அணி இறுதியில் வெற்றி:

இதனையடுத்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி (SA Vs WI) களமிறங்கிய நிலையில், அங்கு மழை அவ்வப்போது குறுக்கிட்டு வந்ததால் 17 ஓவரில் 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிர்ணயம் செய்யப்பட்டது. தென்னாபிரிக்க அணியின் சார்பில் விளையாடியவர்களில் ஏய்டன் 15 பந்துகளில் 18 ரன்னும், திரிஷ்டன் 27 பந்துகளில் 29 ரன்னும், ஹென்றிச் 10 பந்துகளில் 22 ரன்னும், மார்கோ 14 பந்துகளில் 21 ரன்னும் எடுத்திருந்தனர். பொறுமையாக நின்று ஆடிய தென்னாபிரிக்க அணி, இறுதியில் வெற்றியை அடைந்தது. Lok Sabha Speaker: 18 வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக மஹதாப் பொறுப்பேற்பு.!

எட்டிப்பிடித்து பந்தை பிடிக்க முயற்சி:

மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் விளையாடியவர்களில் கயல் 34 பந்துகளில் 35 ரன்னும், ரோஸ்டன் 42 பந்துகளில் 52 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்பரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர். இந்த ஆட்டத்தின் போது சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அதாவது, எட்டாவது ஓவரின் ஐந்தாவது பந்தை தென்னாபிரிக்க அணியின் வீரர் & கேப்டன் மார்க்கம் வீசினார். அதனை களத்தில் நின்றிருந்த கயல் மேயர் அடித்தபோது, பௌண்டரி லைனில் நின்ற ரபாரா மற்றும் ஜான்சன் (Kagiso Rabada and Marco Jansen) ஆகியோர் அந்தரத்தில் வந்து பந்தை பிடிக்க முயற்சித்தனர்.

அப்போது, இருவரும் உயரத்தாவி மோதிக் கொண்டு அங்கேயே சுருண்டு விழுந்தனர். பந்து சிக்சர் சென்று அணிக்கு 6 ரன்கள் கிடைக்க வழிவகை செய்தது. எனினும் லேசான காயத்தால் பாதிக்கப்பட்ட ஜான்சன், முதலில் இரண்டு ஓவர் வீசிவிட்டு அத்துடன் தனது பந்துவீச்சை முடித்துக் கொண்டார். மேலும், ரபாடா இறுதி கட்டத்தில் வேறு வழியின்றி, 18 ஆவது ஓவரில் தனது முதல் ஓவரையும் வீசினார். அணியின் வெற்றிக்காக பீல்டிங்கை உயிரைக் கொடுத்து மேற்கொள்ளலாம் எனும் வீரர்களின் முயற்சி, அவர்களின் உயிருக்கே ஆபத்தான வகையில் முடிந்துள்ளது என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.