Rain Alert 15 Districts: காலை 10 மணிவரை 15 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை; விபரம் இதோ.!
7 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழையும், 8 மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 28, சென்னை (Tamilnadu Weather Update): வடகிழக்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்தடுத்த நாட்களில் மழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகமெங்கும் பெய்துவரும் மழையால், சில மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மழைநீரின் பிடியிலும் சிக்கி வருகின்றன.
இந்நிலையில், இடி-மின்னலுடன் கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு, காலை 10 மணி வரையில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. MP Gang Rape: சமூக வலைத்தளத்தில் அறிமுகமான நண்பரால் 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்: 4 பேர் கும்பலால் நடந்த கொடூரம்.!
அதேவேளையில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் தொடர்ந்து அதிக மழைப்பொழிவு தற்போது வரை கிடைக்கப்பெற்றுள்ளது.