Minor Girl Gang Rape: 15 வயது சிறுமியை காதலன், அவனின் நண்பனுக்கு விருந்தாக்கிய கேடுகெட்ட இளம்பெண்.. விசாரணையில் பதரவைக்கும் உண்மை.. தமிழகமே அதிர்ச்சி..!

சென்னையில் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சிறுமியை அழைத்துச் சென்ற இளம்பெண், தனது ஆண் நண்பர்களை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gang Rape (Photo Credit: Pixabay)

ஜூன் 10, சாலிகிராமம் (Chennai News): சென்னையில் உள்ள சாலிகிராமம் பகுதியில் 15 வயது சிறுமி சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூன் 7-ஆம் தேதி அன்று சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியை பாலியல் பலாத்காரம் (Rape) செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்தனர். இதுகுறித்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சிறுமி தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேரத்தில் அண்ணா நகரில் உள்ள கபேவிற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த கபேவில் சினிமா ஆடை வடிவமைப்பாளரான அகிரா என்ற இளம்பெண்ணுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மே மாதம் 13-ஆம் தேதி அன்று அவரது பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சிறுமியை அழைத்துள்ளார். Jewelry Pawn Shop Robbery: நகை அடகு கடையில் திருட்டு; ரூ. 1 கோடி நகை, பணம் கொள்ளை..!

சிறுமி, சாலிகிராமத்தில் உள்ள அபார்ட்மெண்டில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு அகிரா மற்றும் அவரது நண்பர்கள் சோமேஷ், வில்லியம்ஸ் ஆகியோர் உடன் இருந்துள்ளனர். அப்போது, சிறுமியை வற்புறுத்தி இனிப்பான மதுவை குடிக்க வைத்துள்ளனர். பின் சிறுமி மயக்கம் வருவதாக கூறி தண்ணி கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் ஒரு அறைக்கு கூட்டிச் சென்று, அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமியிடம் அகிரா, இந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார்.

இதன்பின்னர், பல நாட்கள் அமைதியாக இருந்த சிறுமி நடந்தவைகளை பற்றி தனது சகோதரியிடம் கூறியுள்ளார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்த காவல்துறையினர், அகிரா மற்றும் அவரது நண்பர் சோமேஷை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தலைமறைவாகியுள்ள வில்லியம்ஸை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement