ஜூன் 10, மதகுபட்டி (Sivagangai News): சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டியில் தனியார் நகை அடகு கடை (Jewelry Pawn Shop) ஒன்று உள்ளது. மதகுபட்டியை சேர்ந்த பாண்டித்துரை உட்பட 3 பேர் கூட்டாக இணைந்து, இந்த கடையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று கடையின் பின்புற சுவற்றில் ஓட்டை போடப்பட்டிருப்பதை, அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து உடனே பாண்டித்துரைக்கு தகவல் கொடுத்துள்ளனர். IND Vs PAK: அதிரடியாக விளையாடி கம்பேக் செய்த ரிஷப் பண்ட்; அணியின் வெற்றிக்கு போராடிய மாவீரன்..!
விரைந்து வந்த அவர் பார்த்தபோது கடையின் இரும்பு லாக்கரை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. பின்னர், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். மேலும், கொள்ளையர்கள் பயன்படுத்திய கையுறைகளை அங்கேயே கழற்றி விட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து, கொள்ளை நடந்த தகவல் அறிந்த நகை அடகு வைத்தவர்கள், உடனடியாக கடை முன் குவிந்ததால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. இதுதொடர்பாக, மதகுபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.