Bus Rammed into Bike: நெல்லை: முந்திச்செல்ல முயன்றதால் விபரீதம் - தனியார் பேருந்து மோதி கல்லூரி மாணவி நிகழ்விடத்திலேயே பலி.!

அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bus Bike Crash in Sankarankoil on 14-Nov-2024 (Photo Credit: @sureshkalipandi X)

நவம்பர் 14, சங்கரன்கோவில் (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் (Sankarankovil Accident), மானூர், இராமையன்பட்டியை அடுத்துள்ள வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்துரை. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 4 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். பால்துரையின் மூன்றாவது மகள் செல்வம் (வயது 18). இவர் பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் மகளிர் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

சாலையை கடந்தபோது சோகம்:

இதனிடையே, இன்று (14 நவம்பர் 2024) காலை சுமார் 06:50 மணிக்கு மேல், செல்வம் தனது இளைய சகோதரியை பள்ளிக்கு அனுப்பி வைக்க, உள்ளூர் பேருந்து நிறுத்தத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சகோதரியை இறக்கிவிட்ட அவர், சங்கரன்கோவில் - திருநெல்வேலி சாலையை கடக்க முற்பட்டார். Job Alert: திருப்பத்தூர் இளைஞர்களே ரெடியா.. மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. விபரம் இதோ.! 

வேகமாக முந்தி வந்த பேருந்து:

அப்போது, தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து, மானூர் வழியே திருநெல்வேலி செல்லும் தனியார் பேருந்து வேகமாக வந்துகொண்டு இருந்தது. பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிவிட்டு நின்றது. இந்த அரசுப் பேருந்துக்கு முன்புறம் இருசக்கர வாகனத்தில் இருந்த செல்வம், சாலையை கடந்து இருக்கிறார்.

தனியார் பேருந்து - டூவீலர் (Private Bus Rammed into Bike) மோதி விபத்து:

அச்சமயம், தனியார் பேருந்து, அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டு, சாலையின் எதிர்திசையில் வந்தது. இந்த சமயத்தில் சாலையை கடந்த மாணவியின் மீது, தனியார் பேருந்து நேரடியாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்த கல்லூரி மாணவி செல்வம், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். Plastic Water Bottles: கொடைக்கானலுக்கு இ-பாஸ் கட்டாயம்; பிளாஸ்டிக் பாட்டிலுக்கு அபராதம் - மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை.! 

குடும்பத்தினர் சோகம்:

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த மானூர் காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தனியார் பேருந்து ஓட்டுனரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தின் பதறவைக்கும் காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன. விபத்து குறித்து தகவல் அறிந்த மாணவியின் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

பதறவைக்கும் காட்சிகள்: