IPL Auction 2025 Live

வானிலை: வலுப்பெறுகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; நவ.25 முதல் மிககனமழை அலர்ட். வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு இதோ.!

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழையை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tomorrow weather (Photo Credit: LatestLY)

நவம்பர் 24, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்‌இல்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ மழை பெய்துள்ளது. அடுத்த ஏழு இனங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையை பொறுத்தவரையில்,

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுகிறது:

நேற்று பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்‌திய பெருங்கடல்‌ பகுதி மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று (24-11-2024) காலை 05:30 மணி அளவில்‌ தென்‌கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல்‌ பகுதியில்‌ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று, காலை 08:30 மணி அளவில்‌ அதே பகுதியில்‌ நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில்‌ நகர்ந்து, நாளை (25-11-2024) தெற்கு வங்கக்கடலின்‌ மத்‌திய பகுதியில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்‌. இது மேலும்‌ அதற்கடுத்த இரு தினங்களில்‌ வடமேற்கு திசையில்‌ தமிழகம்‌- இலங்கை கடற்கரையை நோக்‌ நகரக்கூடும்‌.

இன்றைய வானிலை (Today Weather):

24.11.2024 அன்று கடலோர தமிழகத்‌தில்‌ ஒருசில இடங்களிலும்‌, உள்‌ தமிழகத்‌தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. Man Dies by Suicide: மகன் உயிரிழந்த அதே இடத்தில் சடலமாக தந்தை - விரக்தியில் வீபரீத முடிவு.! 

நாளைய வானிலை (Tomorrow Weather):

25-11-2024 அன்று கடலோர தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, உள்‌ தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, கடலூர்‌, விழுப்புரம்‌, அரியலூர்‌, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும்‌ இராமநாதபுரம்‌ மாவட்டங்கள்‌, புதுவையில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நவ.26 அன்று கனமழை:

26-11-2024 அன்று தமிழகத்‌தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கடலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்‌சி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவையில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.27 அன்று கனமழை வாய்ப்புள்ள இடங்கள்:

27-11-2024 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. விழுப்புரம்‌, கடலூர்‌, மயிலாடுதுறை, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌ மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்‌சி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, தஞ்சாவூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.28 அன்று கனமழைக்கான இடங்கள்:

28-11-2024 அன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கடலூர்‌, தஞ்சாவூர்‌, நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, மயிலாடுதுறை, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.28 & 30 தேதிகளில் மழைக்கு சாதகமான இடங்கள்:

29-11-2024 அன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னை, திருவள்ளூர்‌, காஞ்‌சிபுரம்‌ மற்றும்‌ செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 30-11-2024 அன்று தமிழகத்‌தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

தலைநகரில் வானிலை (Chennai Weather):

சென்னை மற்றும்‌ புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்‌திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ அதிகாலை வேளையில்‌ லேசான பனி மூட்டம்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 - 31 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்‌. Rowdy Killed: "கத்தியை எடுத்தவன் கத்தியால் அழிவான்" - எதிராளிகளை போட்டுத்தள்ளச்சென்ற ரௌடி கொடூர கொலை..! 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

24-11-2024 அன்று தெற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்‌ காரணமாக, மீனவர்கள்‌ ஆழ்கடல்‌ பகுதிகளில்‌ மீன்‌ பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

25-11-2024 அன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

26-11-2024 அன்று தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

24-11-2024 அன்று தெற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

25-11-2024 அன்று தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, தெற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

26-11-2024 அன்று தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல்‌ 65 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, இடையிடையே 75 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ , மத்தியமேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

27-11-2024 அன்று தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல்‌, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல்‌ 65 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 75 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, தென்‌கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

தெற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்‌ காரணமாக, மீனவர்கள்‌ ஆழ்கடல்‌ பகுதிகளில்‌ மீன்‌ பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

26-11-2024 முதல்‌ 28-11-2024 வரையில் தெற்கு கேரளா மற்றும்‌ அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

புயல் நகர்வுகள் தொடர்பான துல்லிய தகவலை Windy.com ல் பெறுங்கள்..