Cyber Crime | TN Police Logo (Photo Credit: Pixabay / Wikipedia)

நவம்பர் 24, சேத்துப்பட்டு (Technology News): சைபர் மோசடிகள் என்பது இன்றளவில் புதுப்புது வகைகளில் தொடருகிறது. அந்த வகையில், சமீபத்தில் வாட்சப் வழியாக தொடர்புகொண்டு, டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாகவும், போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் நீங்கள் சம்பந்தப்பட்டு இருக்கிறீர்கள் எனவும் பணம் பறிக்கும் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இந்த விபரங்களை அறியாத சிலர், மோசடி நபர்களிடம் ஆயிரக்கணக்கு முதல் இலட்சக்கணக்கு வரை பணம் கொடுத்து இழந்து வருகின்றனர்.

டிஐஜிக்கு மிரட்டல்:

இந்நிலையில், போதைப்பொருள் அடங்கிய பார்சல் ஒன்று வந்திருப்பதாக, பெண் டிஐஜி-ஐ செல்போனில் தொடர்புகொண்டு மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். ஆயுதப்படையில் டிஐஜி-யாக பணியாற்றி வரும் விஜயலட்சுமிக்கு கடந்த நவ.19 அன்று தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை சைபர் கிரைம் காவல் அதிகாரி என அறிமுகம் செய்துள்ளார். Man Dies by Suicide: மகன் உயிரிழந்த அதே இடத்தில் சடலமாக தந்தை - விரக்தியில் வீபரீத முடிவு.!

காவல்துறை விசாரணை:

பின் உங்களது ஆதார் நம்பரை பயன்படுத்தி, தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பார்சலை, அகமதாபாத் நகரிலிருந்து இலங்கைக்கு சர்வதேச கோரிய உதவியுடன் அனுப்பப்பட்டுள்ளது. அதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். சுதாரித்துக்கொண்ட விஜயலட்சுமி, மறுமுனையில் பேசிய நபரின் விபரத்தை கேட்டதும், அவர் அழைப்பை துண்டித்து இருக்கிறார். இந்த விஷயம் குறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தின் சைபர் குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

திருச்சூரைபோல சம்பவம்:

சமீபத்தில் கேரளா மாநிலத்தில் உள்ள திருசூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் பணியாற்றும் காவலருக்கு தொடர்புகொண்ட மோசடி ஆசாமி, கேமிராவை ஆன் செய்யச்சொல்லி வம்படியாக சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. சைபர் குற்றங்களை தடுக்க, இணையவழியில் தொடர்புகொண்டு ஏதேனும் காரணங்களை கூறி மிரட்டல் வந்தால், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.