Chennai Drug Injection Death Case: போதை ஊசியால் இளைஞர்கள் பலியான விவகாரம்; 4 பேர் கும்பல் அதிர்ச்சிகர வாக்குமூலம்.!
இந்த விவகாரத்தில் அதிர்ச்சிதரும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மே 17, சென்னை (Chennai): சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் போதை ஊசி செலுத்திக்கொண்டு இளைஞர்கள் அடுத்தடுத்து மரணமடைந்த (Drug Injection Death) விவகாரம் தொடர்பாக சென்னை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்துகையில், தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் போதை ஊசிகளை விற்பனை செய்தது உறுதியானது. இவரின் வீட்டிற்கு அதிரடி சோதனையும் நடைபெற்றது. அப்போது, அவரின் வீட்டில் பல போதை மாத்திரை அட்டைகள் கைப்பற்றப்பட்டன. பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்பேரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ராஜேஷ் என்கிற சின்னப்பாம்பு, ரஞ்சித் என்ற பாம்பு ரஞ்சித், உதயகுமார் ஆகியோர் என 4 பேர் மொத்தம் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 1110 போதை மாத்திரைகள், போதை சிரஞ்சுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். Neuralink Second Patient: மனித மூளையில் சிப்.. 2வது மனிதரின் மீதான சோதனை வெற்றி.. எலன் மஸ்கின் அறிவிப்பு..!
டோர் டெலிவரி செய்யப்பட்ட போதைப்பொருள்: ஆன்லைன் தலத்தில் ரூ.350 க்கு மாத்திரை அட்டைகளை வாங்கி, ஒரு அட்டை தலா ரூ.2000 வீதம் விற்பனை செய்துள்ளனர். மேலும், டோர் டெலிவரி வசதியையும் இவர்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். மேலும், ஹைதராபாத்தில் இருந்து ஆன்லைன் செயலி வாயிலாக போதைப்பொருளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும் இவர்கள், போதை மாத்திரையை நீரில் கலந்து ஒரு நீடில் சிரஞ் ரூ.3000 வரையிலும் விற்பனை செய்து இருக்கின்றனர். விசாரணையை தொடர்ந்து நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு போதைப்பொருள் வழங்கிய கும்பல் குறித்து விசாரணை நடைபெறுகிறது.