Neuralink Second Patient (Photo Credit: @elonmusk X)

மே 17, கலிபோர்னியா (Technology News): கடந்த சில வருடங்களுக்கு முன்பு எலன் மஸ்க் ட்விட்டர் (Twitter) நிறுவனத்தினை வாங்கினார். தொடர்ந்து அந்த இணையதளத்தின் பெயரை எக்ஸ் (X) என்று மாற்றினார். அவர் அந்த சமூக வலைதளத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருந்தே இருந்தார். மற்றொரு பக்கம் நியூராலிங்க் (Neuralink) அமைப்பின் சார்பில் மனிதர்களின் மூளையில் ஸ்டார்ட்டர் சிப் பொருத்தி, அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பரிசோதனை செய்து வந்தார்.

அதுமட்டுமின்றி கடந்த ஜனவரி மாதம் இந்த பரிசோதனையின் முதற்கட்ட சோதனை வெற்றி அடைந்துள்ளதாகவும், முதல் மனிதர் நியூராலிக்கை பொருத்தி, அவர் நலமுடன் இருப்பதாகவும் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தகவல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் 2வது மனிதரின் மீதான சோதனை நடத்தப்பட்டு அதுவும் வெற்றி அடைந்துள்ளதாக எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தகவல் தெரிவித்துள்ளார். X URL Transferred From twitter.com: இனி ட்விட்டர்.காம் கிடையாது.. "எக்ஸ்.காம்" மட்டும் தான்.. எலன் மஸ்கின் அதிரடி..!

மனித திறன்களை மிகைப்படுத்துவது, ALS அல்லது பார்கின்சன் போன்ற நரம்பியல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் ஒரு நாள் மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையே ஒரு கூட்டுவாழ்வு உறவை அடைவதே இதன் லட்சியம் என்று எலான் மஸ்க் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மனிதர்களிடம் சோதனை செய்ய, பக்கவாத நோயாளிகள் தாமாக முன்வந்து விண்ணப்பிக்கலாம் என்று, எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம் அழைப்பு விடுத்திருக்கிறது.