Car Rammed into Man: சாலையோரம் உறங்கியவர் மீது காரை ஏற்றிப்படுகொலை; சென்னையில் பயங்கரம்.. பதைபதைப்பு காட்சிகள்.!

வேலைக்கு செல்லாமல் சாலையில் படுத்து உறங்குவதை வாடிக்கையாக கொண்டவர், இறுதியில் தான் உறங்கிய இடத்திலேயே எமனை சந்தித்த சோகம் நடந்துள்ளது.

Thousand Lights Car Rammed into Man (Photo Credit: @ThanthiTV X)

செப்டம்பர் 17, ஆயிரம்விளக்கு (Chennai News): சென்னையில் உள்ள ஆயிரம்விளக்கு, மார்டன் பள்ளி பகுதியில் வசித்து வருபவர் பன்னீர் செல்வம் (வயது 64). இவருக்கு மனைவி, 4 குழந்தைகள் இருக்கின்றனர். வேலைக்கு சென்று குடும்பத்தை கவனிக்காமல், தனது உற்சாக வாழ்க்கையே முக்கியம் என்பது போல சுற்றிவந்த பன்னீர், தங்கும் விடுதியில் சாலையோரம் உறங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

காதுகளில் இரத்தம் வழிந்து மரணம்:

இதனிடையே, கடந்த செப்டம்பர் 13ம் தேதி இரவில் சாலையோரம் உறங்கியவர், செப் 14 ம் தேதி காலை பேச்சு-மூச்சின்றி சடலமாக மீட்கப்பட்டார். அவர் இயற்கையாக மரணம் அடைந்து இருக்கலாம் என உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதனிடையே, மயானத்தில் உடலை நல்லடக்கம் செய்வதற்கு முன்பு, பன்னீர் செல்வத்தின் காது பகுதியில் இரத்தம் வழிந்துள்ளது. Nipah Virus: நிபா வைரஸ் மரணம் எதிரொலி; உஷார் நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லை.. சோதனைகள் தீவிரம்.! 

சிசிடிவியில் அதிர்ச்சி காட்சிகள்:

இதனால் அவரின் மரணத்தில் மர்மம் உள்ளதாக சந்தேகப்பட்ட பன்னீர் செல்வத்தின் மகள் வனரோஜா, தங்கும் விடுதிக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆராய்ந்துள்ளார். அப்போது, நள்ளிரவு நேரத்தில் தந்தையின் மீது காரின் சக்கரங்கள் ஏறி-இறங்கியதில் அவர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார். உண்மையை அறிந்த வனரோஜா, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல் துறையினர் விசாரணை:

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்துள்ள நிலையில், காரின் பதிவெண் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். காரை இயக்கிய நபருக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ள நிலையில், அது போலியானது என்பதும் தெரியவந்துள்ளதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பன்னீர் செல்வத்தின் மீது காரை ஏற்றி-இறக்கி படுகொலை செய்த பதைபதைப்பு காணொளி:

வீடியோ நன்றி: தந்தி தொலைக்காட்சி