Nipah Virus (Photo Credit: @TimesofIndia X)

செப்டம்பர் 17, தென்காசி (Tenkasi News): கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர், சமீபத்தில் நிபா வைரஸ் (Nipah Virus) தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 178 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில், 15 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 28 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வீடு-வீடாக வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்மாநில அரசு ஐசிஎம்ஆர் உதவியை நாடவும் முடிவு செய்துள்ளது. TVK Vijay Honour to Periyar: பகுத்தறிவு பகலவனின் பிறந்தநாள்: தந்தை பெரியார் சிலைக்கு த.வெ.க தலைவர் விஜய் மலர்மாலை வைத்து மரியாதை..! 

மாநில எல்லையில் சோதனைகள் தீவிரம்:

இதனிடையே, கேரளா மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு வந்துசெல்வோரை கண்காணிக்கும் பொருட்டும், தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவுதலை தடுக்கவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன் ஒரு படியாக, கேரளா மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு வந்து செல்லும் இரண்டு மாநில எல்லைகளாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

தயார் நிலையில் மருத்துவமனைகள்:

அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், கார்கள் என அனைத்து வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளித்து வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. காய்ச்சல் அறிகுறியுடன் இருப்போரை மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய 6 மாவட்டங்களில் இருக்கும் மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குமரி, தென்காசி, கோவை உட்பட 6 மாவட்டங்களில், நீலகிரியில் மட்டும் 6 க்கும் மேற்பட்ட தமிழ்நாடு - கேரளா மாநில எல்லை நுழைவு வாயில்கள் இருக்கின்றன. இதனால் அங்கு அனைத்து எல்லைகளும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.