School Boy Died: தண்ணீர் கேன் தூக்கிச் சென்ற மாணவன் உயிரிழப்பு – காவல்துறை விசாரணை..!

தந்தை, மகன் இருவரும் மாடிக்கு தண்ணீர் கேன் தூக்கிச் செல்லும் வழியில் மகன் திடீரென உயிரிழந்த சம்பவம் வியாசர்பாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Water Can | Dead Body file pic (Photo credit: Flipkart.com / Pixabay)

மார்ச் 12, பெரம்பூர் (Chennai News): சென்னையில் உள்ள வியாசர்பாடி, ஏ.கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திபன் (வயது 46). ஐடி நிறுவன ஊழியரான (IT Employee) இவருக்கு விஜய் திலீபன் (வயது 16) என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தை மற்றும் மகன் இருவரும் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் 2 தண்ணீர் கேன்களை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளனர். விஜய் திலீபன் மட்டும் 1 தண்ணீர் கேனை தூக்கிக்கொண்டு மாடிக்குச் சென்றுள்ளார். பின்னர், தந்தை இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு மற்றொரு தண்ணீர் கேனை எடுத்துக்கொண்டு மாடிக்குச் செல்லும் வழியில், தண்ணீர் கேன் சாய்ந்து கிடந்துள்ளது. அவரது மகனும் மயக்க நிலையில் கிடந்துள்ளார். பதற்றமடைந்த தந்தை உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். Robot Serve Food: ஓட்டலில் வேலை பார்க்கும் ரோபோ – வீடியோ வைரல்..!

மருத்துவ பரிசோதனை: விஜய் திலீபன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அவரது தந்தையினால் ஏற்றுக்கொள்ளமுடியாமல் கதறி அழுது புலம்பினார். மேலும், சிறுவன் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் எனவும் சந்தேகம் எழுகிறது. காவல்துறையினர் தரப்பில், முழு உடற்கூற் ஆய்வு மேற்கொண்ட பிறகே அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தெரிய வரும் என்றனர். மேலும்,16 வயதுடைய சிறுவன் மர்மமான வகையில் திடீரென உயிரிழந்தது, அப்பகுதி மக்கள் மற்றும் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.