Child Abuse: 12 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்ட வாலிபர்.. நடுரோட்டில் அடித்து நொறுக்கிய பெற்றோர்..!
12 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஜூலை 19, திருவொற்றியூர் (Chennai News): திருவொற்றியூர் (Tiruvottiyur) பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் ஒருவருடன் பழகி வந்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். அந்த வாலிபரையும் எச்சரித்துள்ளனர். இதனால், சிறுமி அந்த வாலிபரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். Dating App Scam in Mumbai: டுபாக்கூர் ஹோட்டல்.. டேட்டிங் ஆப் மூலம் ஹோட்டலுக்கு வரவைத்து மோசடி செய்யும் கும்பல்..!
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், சிறுமிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் (Instagram) பதிவேற்றம் செய்துள்ளார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த வாலிபரை, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுற்றி வளைத்து அடித்துள்ளனர். தொடர்ந்து அவரை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.