Temple Priest Arrest: பூசாரியால் பலாத்காரம் செய்யப்பட்ட தொகுப்பாளினி; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!
சென்னையில் கோவில் அர்ச்சகர் ஒருவர் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு விசாரணையில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன.
மே 17, விருகம்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில், 'நான் என்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறேன். சென்னை பாரிமுனையில் உள்ள அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதர்காக நான் அடிக்கடி சென்று வந்தேன்.
பாலியல் பலாத்காரம்: அப்போது, அங்கு கோவில் பூசாரியாக (Temple Priest) பணியாற்றி வரும் கார்த்திக் முனுசாமி என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், ஒருநாள் சொகுசு காரில் அவரது வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்று தீர்த்தம் எனக்கூறி, மயக்க மருந்து கலந்து கொடுத்து குடிக்க கொடுத்தார். அதனை குடித்த சற்று நேரத்தில் நான் மயங்கியுள்ளேன். அந்த சமயத்தில் அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். Teenager Murder: காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை; இளம்பெண்ணின் சகோதரர் தலைமறைவு..!
பாலியல் தொழிலில் தள்ள முயற்சி: இதனையடுத்து ஆசை வார்த்தை கூறி, அம்மன் கோவிலில் வைத்து அவர் தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து, நாங்கள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்துவிட்டார். மேலும், அவரது தோழி சுவேதா என்பவர், என்னை பாலியல் தொழிலுக்கு செல்ல கட்டாயப்படுத்தியதோடு மட்டுமில்லாமல், கார்த்திக் முனுசாமியின் மனைவி பிரியா என்பவர் இதுபற்றி வெளியே கூறினால் கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்' என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.
கோவில் பூசாரி கைது: இதுதொடர்பாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், பூசாரி கார்த்திக் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபனமானதை அடுத்து, அவரது செல்போனிலிருந்து ஏராளமான இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இருந்துள்ளன. மேலும், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பூசாரி கார்த்திக்கை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவரை கைது செய்து விருகம்பாக்கம் மகளிர் காவல்துறையினர் ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது கோயில் அறங்காவலர் குழு அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.