Sanitation Worker Recovers Diamond Necklace: குப்பை தொட்டியில் இருந்து வைர நெக்லஸை மீட்ட தூய்மை பணியாளர்; குவியும் பாராட்டு.. வீடியோ வைரல்..!
சென்னையில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸை தூய்மை பணியாளர் எடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜூலை 22, விருகம்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள விருகம்பாக்கம், பிவி ராஜமண்ணார் சாலையில் உள்ள விண்சர் பார்க் குடியிருப்பில் வசித்து வருபவர் தேவராஜ். இவரது வீட்டில் இருந்த வைர நெக்லஸ் (Diamond Necklace) திடீரென்று மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீடு முழுவதும் தேடிப்பார்த்துள்ளார். எங்கு தேடியும் வைர நெக்லஸ் கிடைக்கவில்லை. இந்த மாயமான வைர நெக்லஸின் மதிப்பு ரூ.5 லட்சமாகும். இதனால் அவர் தொடர்ந்து தேடிவந்துள்ளார். இருப்பினும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. Child Murdered By Grandmother: குழந்தையின் வாயில் மண்ணை அள்ளிப்போட்டு கொன்ற பாட்டி; விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
அப்போது அவர் வைர நெக்லஸ் அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால், அது கீழே விழுந்து இருக்கலாம். அதனை கவனிக்காமல் குப்பையோடு குப்பையாக கூட்டி வெளியே குப்பை தொட்டியில் போட்டு இருக்கலாம் என எண்ணியுள்ளார். இதனால் வீட்டருகே அவர் குப்பை போடும் தொட்டியில் தேட முடிவு செய்துள்ளார். மேலும், இதுதொடர்பாக சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் உர்பசேர் நிறுவனத்தை தொடர்புகொண்டுள்ளார். நிறுவனத்தின் தூய்மை பணியாளரும் (Sanitation Worker), குப்பை வாகன ஓட்டுநர் அந்தோணிசாமி என்பவர் அங்கு வந்து குப்பை தொட்டியில் வைர நெக்லஸை தேடினார்.
இதனையடுத்து குப்பை தொட்டியில் வைர நெக்லஸ் இருந்தது தெரியவந்தது. அதனை குப்பையில் இருந்து எடுத்து, தேவராஜிடம் ஒப்படைத்தார். வைர நெக்லஸை வாங்கி கொண்ட தேவராஜ் தூய்மை பணியாளர் அந்தோணி சாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதன் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனைப் பார்த்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.