Omni Bus Driver Tortured: ஓட்டுநரின் கைகளை ஜன்னலில் கட்டிவைத்து துன்புறுத்தல்.. வைரலான வீடியோ.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

மதுரை மாட்டுத்தாவணி ஆம்னிபேருந்து நிலையத்தில் உள்ள தனியார் பேருந்து நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநரின் கையை கயிற்றால் ஜன்னலில் கட்டி வைத்து சிலர் விசாரணை நடத்துவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Omni Bus Driver Tortured (Photo Credit: @backiya28 X)

ஜூலை 24, மதுரை (Madurai News): மதுரையில் முக்கிய பேருந்து நிலையமாக இருப்பது மாட்டுத்தாவணி (Mattuthavani) பேருந்து நிலையம். அங்குள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் (Omnibus Station) ஏராளமான தனியார் பேருந்து நிறுவனங்கள் இயங்கி வருகின்றது. இங்கிருந்து பேருந்துகள் சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே அங்கு ஆம்னி பேருந்து ஓட்டுநர் அதிக விலைக்கு பயணிகளை ஏற்றி பணம் பெற்ற விவகாரம் ஆம்னி பேருந்து உரிமையாளருக்கு தெரியவந்துள்ளது. Ajith Kumar Joins Yash’s KGF 3?: "சலாம் ராக்கி பாய்" கே.ஜி.எஃப் டைரக்டர் பிரசாந்த் நீலுடன் இணையும் அஜித்.. உருவாகும் கேஜிஎஃப் யூனிவெர்ஸ்..!

இதனை அடுத்து, ஓட்டுநரை, அங்குள்ள பணியாளர்கள் மற்றும் பேருந்து நிறுவன அலுவலர்கள் ஓட்டுநரின் கையை கயிற்றால் ஜன்னலில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த வீடியோ தொடர்பாக மாட்டுத்தாவணி காவல் துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif