Manobala Death Reason: சிகிரெட் பழக்கத்தால் பிரிந்த உயிர்; மனோபாலா மரணத்திற்கு முக்கிய காரணம் இதுதான்.!
கெத்துக்காக சிகிரெட், மது, கஞ்சா குடிக்கிறேன் என பேசும் ஒவ்வொருவருக்கும் மனோபாலாவின் மறைவு கண்ணில் வந்துபோக வேண்டும்.
மே 04, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் மனோபாலா. இவர் கடந்த காலங்களில் பல்வேறு படங்களை இயக்கியும், தயாரித்தும் தமிழ் திரையுலகிற்கு வழங்கி இருக்கிறார். இவரின் இயற்பெயர் மனோபாலா. கமல் ஹாசனின் உதவியால் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய மனோபாலா, இன்றளவில் பல்வேறு படங்களை வழங்கி இருக்கிறார். நடித்து நம்மை காமெடியில் சிரிக்க வைத்து மகிழ்ந்து இருக்கிறார்.
சென்னையில் வசித்து வந்த அவர், கல்லீரல் தொற்று மற்றும் பிற உடல்நல பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 15 நாட்களாக வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி மறைந்தார். அவரின் மறைவை ஏற்றுக்கொள்ள இயலாத திரையுலகினர் பலரும் நேரில் சென்று தங்களின் இரங்கலை பதிவு செய்தனர்.
மனோபாலாவின் இறப்பு திரைஉலகினரால் ஏற்றுக்கொள்ளப்பட இயலவில்லை என்றாலும், பல திரையுலகினரின் உடல் நலத்தினை கெடுக்கும் பழக்கம் அவரின் உயிரையும் விரைந்து காவு வாங்கியது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இயக்குனராக தான் பணியாற்றும்போது புகைப்பழக்கம் அளவில்லாமல் இருந்ததையும், அதனால் தனது உடல்நலம் மோசமானத்தையும் அவரே வெளிப்படையாக பல பேட்டிகளில் தெரிவித்து இருந்தார். Accident Video: பைனல் டெஸ்டினேஷன் பாணியில் பதைபதைப்பை தரும் விபத்து; நூலிழையில் தப்பித்த காவலர்..! அதிர்ச்சி வீடியோ வைரல்.!
இன்றளவில் திரையில் நாயகர்களாக ஜொலிக்கும் நடிகர்களும், அதனை இயக்கும் இயக்குனர்களும் பல காரணத்திற்காக தான் கொண்ட புகைப்பழக்கத்தை கைவிட இயலாமல் பல கட்டங்களாக திணறி இருக்கின்றனர். நாம் சூப்பர்ஸ்டாராக இன்று வரை கொண்டாடி வரும் ரஜினிகாந்த் புகைப்பழக்கத்தை கைவிட்ட காரணம் நாடு அறிந்தது. அன்று அவர் புகைப்பழக்கத்தை விடாமல் இருந்திருந்தால், இன்று அவரின் உடல்நலம் தற்போதைய நிலைமையை விட கடுமையாக மோசமாகி இருக்கும்.
திரைப்படங்கள் வாயிலாக மக்களுக்கு நல்ல கருத்துக்களை வழங்கும் இயக்குனர்கள் மற்றும் பிற திரையுலகினர், தங்களது அலுவல் பணிகள் அல்லது பிற பிரச்சனை என ஊருக்கு கருத்து சொல்லிவிட்டு தனது உடலை பேணிக்காக்காமல் இருப்பது நல்லதல்ல என்பதற்கு மனோபாலா போன்ற பல நடிகர்களே சாட்சியாக இருக்கின்றனர். புகைப்பழக்கத்தை ஒழிப்போம், நலமான வாழ்வு வாழ்வோம்.
நம்மை புகை, மதுபழக்கம் ஒன்றும் செய்யாது என அஜாக்கிரதையுடன் செயல்படுவோரும் சரி, அது வலியை தந்திடுமா? என்று கேட்போருக்கு சரி, இறுதிக்கட்டத்தில் நாம் உடல் நலம் மோசமாகி உணவு எடுக்க இயலாமல், தண்ணீர் குடிக்க இயலாமல் ஆண்டவா மரணத்தை தந்துவிட்டேன் என்று கதறும் சூழல் வரும்போதுதான் அனைத்தும் கண்முன் வந்துபோகும். அதுவரை ஆலோசனை கூறுபவர் எல்லோரும் பிழைக்கத்தெரியாதவர்களாகத்தான் இருப்பார்கள் உங்களின் பார்வைக்கு..