A Girl Cheated On Her Husband And Ran Away: கணவனை கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி வரச் சொல்லி திட்டம்போட்டு தப்பியோடிய சிறுமி..! - விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Marriage (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 27, சென்னை (Chennai News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாட்கோ நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 30). இவர் திருவள்ளூர் செங்காடு பகுதியில் உள்ள தனியார் பைக் ஷோருமில் (Bike Showroom) பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2-ஆம் தேதி அன்று தனது உறவினர் பெண்ணுடன், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி நாகராஜ், தனது மனைவியுடன் மெரினா கடற்கரையை சுற்றி பார்ப்பதற்காக, ரயில் மூலம் பயணித்து வந்துள்ளனர். பின்னர், ரயில் நிலையம் எதிரே உள்ள சாலையில் ஆட்டோவில் பயணம் செய்வதற்காக இவர்கள் இருவரும் அங்கு நின்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென வயிறு வலிப்பதாக மனைவி தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் தனக்கு ஏதேனும் கூல்ட்ரிங்க்ஸ் (Cooldrinks) வாங்கி தாருங்கள் என கேட்டுள்ளார். இதனையடுத்து, நாகராஜ் அருகில் உள்ள கடைக்குச் சென்று கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி கொண்டு திரும்பி வந்து பார்த்த போது, தனது மனைவி அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து, செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதற்றமடைந்த அவர், பெரியமேடு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். Samsung Galaxy C55 Launch: சாம்சங் கேலக்சி சி55 விலை எவ்வளவு தெரியுமா..? விவரம் இதோ..!

இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த இளம்பெண் புளியந்தோப்பு மன்னன் தெருவை சேர்ந்த அருண்குமார் (வயது 19) என்ற வாலிபருடன், பெரியமேடு காவல் நிலையத்தில் இருவரும் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து விசாரிக்கையில், இளம்பெண் நர்சிங் கல்லூரியில் படிக்கும் போது, அருண்குமாரை காதலித்து வந்துள்ளார். ஆனால், தனது பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவித்து, திருமணம் செய்து வைத்துவிட்டனர். இதனால், தனது காதலன் அருண்குமாருக்கு போன் மூலம் தகவல் அளித்து, அவரை வரவழைத்து சென்றுள்ளது தெரியவந்தது. மேலும், திருமணமான இளம்பெண் 17 வயது சிறுமி என்பதும் கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக, காவல்துறையினர் இந்த வழக்கை வேப்பேரி அனைத்து மகளிர் காவல்துறையினரிடம் மாற்றினர். இதனையடுத்து, சிறுமியின் கணவர் நாகராஜ் மற்றும் காதலன் அருண்குமார் மீது போக்சோ சட்டம் உட்பட இரு வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.