ஏப்ரல் 27, சென்னை (Technology News): சாம்சங் கேலக்சி சி55 விலை எவ்வளவு தெரியுமா?சாம்சங் கேலக்சி சி55 (Samsung Galaxy C55) ஸ்மார்ட்போன் சீனாவில் ஏப்ரல், 23-ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய கேலக்ஸி சி சீரிஸ் ஃபோன் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 1 SoC-வுடன் இயங்குகிறது. OS ஆண்டராய்டு 14 One UI 6.1, இதில், 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் ரூ. 23,000 விலையிலும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 26,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Omni Bus Accident: தடுப்புச்சுவரில் ஆம்னி பேருந்து மோதி விபத்து; 20 பேர் படுகாயம்..!

பஞ்ச் ஹோல் வடிவமைப்பில் 6.7-இன்ச் FullHD+ (1,080x2,400 பிக்சல்கள்) அமோல்டு பிளஸ் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 50MP டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 50MP செல்பி கேமராவுடன், 5,000mAh பேட்டரி திறனுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் உள்ளது. இதில் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம் உடைய ஸ்பீக்கர்கள் உள்ளன. இதில் பின்புறம் லெதர் பேனலுடன் ஆரஞ்சு மற்றும் கருப்பு வண்ணங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.