Palamedu Jallikattu: பாலமேடு ஜல்லிக்கட்டு ஆரம்பம்... சீறி பாயும் காளைகள்... அடக்கும் வீரர்கள்..!
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று காலை மிகப் பிரம்மாண்டமாக தொடங்கியது.
ஜனவரி 16, மதுரை (Madurai): பொங்கல் பண்டிகையானது 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. போகி பொங்கல், தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகும். இந்த நான்கு தினங்களுக்கும் தனி தனி சிறப்பு பெயர் உள்ளது. தமிழர்கள் எத்தனை வகையான விழாக்கள் கொண்டாடினாலும் முதன்மை பெற்றுள்ளது இந்த பொங்கல் பண்டிகை. தைத் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி, தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். Pongal Celebration: இன்று தை 2ம் நாள்: மாட்டுப்பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன?.. விபரம் இதோ.!
அவனியாபுர ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு முதல்வர் சார்பில் கார் பரிசளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 10 சுற்றுகளாக நடைபெற்றது. மொத்தமாக 825 காளைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அதிக காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்தி பரிசுக்கோப்பை மற்றும் காரை வென்றார். அதுமட்டுமின்றி ஜீர் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு பரிசுக் கோப்பை மற்றும் கார் பரிசாக கொடுக்கப்பட்டது.
பாலமேடு ஜல்லிக்கட்டு: இன்று காலை 7 மணியளவில் பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்தப் போட்டி குறைந்தபட்சம் 8 சுற்றுகளாக மாலை 4 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 75 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பர். ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர்கள் அடுத்த சுற்றில் விளையாட அனுமதிக்கப்படுவர். இதுவரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் விளையாட ஆன்லைனில் 3677 காளைகளும் 1412 மாடு பிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1000 காளைகள் மற்றும் 700 வீரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.