Chengalpattu Earthquake: செங்கல்பட்டை மையமாக வைத்து, 3.2 புள்ளிகள் அளவில் மிதமான நிலநடுக்கம்: தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!
அவ்வப்போது சிறிய நின்டுகங்கள் ஏற்படுகின்றன.
டிசம்பர் 08, சென்னை (Chennai): துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்படும் என நிலவியல் ஆய்வாளர் Frank Hoogerbeets என்பவர் எச்சரிக்கை விடுத்தார். இவர் துருக்கி - சிரியா நிலநடுக்கத்தையும் முன்னதாகவே கணித்து இருந்தார்.
இயற்கையின் கோரத்தாண்டவம் இந்தியாவிலும் உறுதி: அவரின் கூற்றை உறுதிசெய்யும் வகையில், பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வந்தது. உயிர்பலியும் ஏற்பட்டு இருந்தன. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவில் உள்ள டெல்லி, உத்திரபிரதேசம், உத்திரகாண்ட் மாநிலங்கள் வரை லேசாக உணரப்பட்டது. Junior Mehmood Dies at 67: பழம்பெரும் திரைப்பட இயக்குனர், நடிகர், பாடகர் புற்றுநோயால் காலமானார்: திரையுலகினர் சோகம்.!
தமிழகத்தில் நிலநடுக்கம்: இந்நிலையில், செங்கல்பட்டு (Chengalpattu Earthquake Today) மாவட்டத்தை மையமாக கொண்டு இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 07:39 மணியளவில், செங்கல்பட்டு பகுதியில், பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் மிதமான அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.