Chengalpattu Accident: ஆட்டோ - தமிழ்நாடு அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 6 பேர் பரிதாப பலி..!
சாலைகளில் மிதவேகம் மிகநன்று என்பதை பல இடங்களில் நினைவில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாலும், விதிமுறைகளை மீறும் அலட்சியவாதிகளால் விபத்துகள் நேருகின்றன.
மே 04, மகாபலிபுரம் (Accident News): செங்கல்பட்டு (Chengalpattu) மாவட்டத்தில் உள்ள மகாபலிபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் (East Coastal Road) கடும்பாடி - மணமை கிராமம் உள்ளது. சென்னை ஆலந்தூர் (Alandur) பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கோவிந்தன். இவர் தனது உறவினர் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிக்காக மனைவி, குழந்தைகள், தாயார், மகள் மற்றும் பேத்தி உட்பட உறவினர்கள் 11 பேருடன் கிழக்கு கடற்கரை சாலையில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, அவ்வழியே சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு 30 பயணிகளை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு பேருந்து அதிவேகத்தில் வருகை தந்துள்ளது. இந்த இரண்டு வாகனங்களும் எதிர்பாராத விதமாக கடும்பாடி - மணமை கிராமங்களுக்கு இடையே நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். Kottayam Women Suicide: இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலன்; தொடரும் மர்ம தற்கொலைகள்.. அதிர்ச்சியில் கேரள மக்கள்.!
ஆட்டோவுக்குள் இருந்த பிற 5 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி இருக்கின்றனர். மேலும், செல்லப்பிராணிகளும் இருந்துள்ளன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாமல்லபுரம் காவல் துறையினர், விபத்தில் பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.