Chengalpattu Shocker: குதிரை சவாரி தொழிலாளி கொடூரமாக வெட்டிக்கொலை; கஞ்சா போதை ஆசாமிகள் 5 பேரிடம் விசாரணை.!
கஞ்சா போதையில் நடக்கும் கொலைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் வெகுவாக அதிகரித்து வருவது மக்களை அச்சத்திற்குள்ளாக்குகிறது.
அக்டோபர் 22, மாமல்லபுரம் (Chengalpattu Crime News): தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் உடும்பன் என்ற ரூபன் (வயது 23). கடந்த ஐந்து ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம், ஒத்தவாடை தெரு பகுதியில் வசித்து வந்துள்ளார்.
மேலும், அப்பகுதியை சார்ந்த ஒருவரிடம் குதிரையை பராமரிக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். மாமல்லபுரம் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளை குதிரையில் அழைத்துச் செல்வது இவரின் வேலை ஆகும்.
இந்நிலையில், இன்று காலை நேரத்தில் கடற்கரை கோவில் அருகே உள்ள பகுதியில், உடும்பன் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். Sapodilla Fruit: பருவகால நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் சப்போட்டா; நன்மைகள் குறித்த தகவல் இதோ.!
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மாமல்லபுரம் காவல்துறை அதிகாரிகள், உடும்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில், நேற்று இரவு நேரத்தில் அப்பகுதியை சார்ந்த வாலிபர்கள் சிலருக்கும் - உடும்பனுக்கும் இடையே மோதலானது ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ள நிலையில், 5 பேரை சந்தேகத்தின் பெயரில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கைதான ஐந்து பேரும் கஞ்சா போதையில் இருந்ததால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.