Chennai Sub Urban Train: சென்னை புறநகர் இரயில் ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல்; இரயிலை இயக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு.!
வளைவான பகுதியில் நடைமேடையை கடந்து மெதுவாக வந்த இரயிலை, தண்டவாளத்தில் குறுக்கே நின்று மறித்த இளைஞர், இரயில் ஓட்டுனரின் மீது தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் செங்கல்பட்டில் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 18, செங்கல்பட்டு (Chengalpattu News): சென்னை கடற்கரை இரயில் நிலையத்தில் இருந்து (Chennai Sub Urban Train) வேளச்சேரி, செங்கல்பட்டு, ஜோலார்பேட்டை, காஞ்சிபுரம் மார்க்கமாக புறநகர் மின்சார இரயில் சேவை மக்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரயிலை நாளொன்றுக்கு கோடிக்கணக்கான மக்கள் அணுகி பலன் பெறுகின்றனர்.
நேற்று செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி பயணிக்க காத்திருந்த இரயில், அனுமதி கொடுக்கப்பட்டதும் மெதுவான வேகத்தில் வளைவு பகுதியில் நகர்ந்து சென்றுள்ளது. Guava Fruit Benefits: அடடே.. கொய்யாப்பழம் சாப்பிடுவதில் இவ்வுளவு நன்மைகள் இருக்கா?.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.!
அப்போது, இளைஞர் தண்டவாளத்தின் நடுவே நின்றுள்ளார். இதனைகவனித்த ஓட்டுநர் இரயில் மெதுவான வேகத்தில் பயணித்தால் நிறுத்தி இருக்கிறார். இந்நிலையில், இளைஞர் சற்றும் எதிர்பாராத தருணத்தில் ஓட்டுனரின் அறைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இரயிலையும் இயக்க முயற்சிக்கவே, ஓட்டுநர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள், ஓட்டுனரை பத்திரமாக மீட்டனர். சர்ச்சை செயலில் இறங்கிய இளைஞரையும் கைது செய்தனர்.
அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில், சம்பந்தப்பட்ட இளைஞர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வளந்தை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் இரயில் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.